என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » namrata jain
நீங்கள் தேடியது "Namrata Jain"
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 12-வது ‘ரேங்க்’ பெற்று மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த பகுதியை சேர்ந்த பெண் சாதனை படைத்துள்ளார். #CivilServicesExam #Maoisthit #NamrataJain
புதுடெல்லி:
கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள், இம்மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டன. அதில், சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டம் கீடம் நகரைச் சேர்ந்த நம்ரதா ஜெயின் (வயது 25) என்ற இளம்பெண், தேசிய அளவில் 12-வது ‘ரேங்க்’ பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், தண்டேவாடாவில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு, பிலாயில் என்ஜினீயரிங் படித்தவர். இவருடைய தந்தை உள்ளூர் வியாபாரி ஆவார். தாயார் குடும்பத்தலைவி. சகோதரர் ஆடிட்டருக்கு படித்து வருகிறார்.
நம்ரதா ஜெயின், ஏற்கனவே 2016-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 99-வது ‘ரேங்க்’ பெற்றவர். அப்போது அவருக்கு ஐ.பி.எஸ். (காவல்துறை) ஒதுக்கீடு செய்யப்பட்டதால், ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
ஆனால், தற்போது தனக்கு ஐ.ஏ.எஸ். ஒதுக்கீடு செய்யப்படும் என்று நம்ரதா எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட சத்தீஷ்கார் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக அவர் கூறினார். #CivilServicesExam #Maoisthit #NamrataJain
கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள், இம்மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டன. அதில், சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டம் கீடம் நகரைச் சேர்ந்த நம்ரதா ஜெயின் (வயது 25) என்ற இளம்பெண், தேசிய அளவில் 12-வது ‘ரேங்க்’ பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், தண்டேவாடாவில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு, பிலாயில் என்ஜினீயரிங் படித்தவர். இவருடைய தந்தை உள்ளூர் வியாபாரி ஆவார். தாயார் குடும்பத்தலைவி. சகோதரர் ஆடிட்டருக்கு படித்து வருகிறார்.
ஆனால், தற்போது தனக்கு ஐ.ஏ.எஸ். ஒதுக்கீடு செய்யப்படும் என்று நம்ரதா எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட சத்தீஷ்கார் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக அவர் கூறினார். #CivilServicesExam #Maoisthit #NamrataJain
×

X