search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Napier Bridge"

    • கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
    • 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    சென்னை:

    சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கூவம் ஆற்றின் தண்ணீரும் கடலுக்குள் செல்ல வழியில்லாமல் தேங்கி காணப்படுகிறது.

    இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவார பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

    இந்த பணிகளுக்காக நேப்பியர் பாலம் அருகே 200 கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த கான்கிரீட் கற்கள் கடலுக்குள் வேலி போல அமைக்கப்படும். இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தடுத்து நிறுத்தி கடல் அரிப்பை தடுக்கும். பெரிய அலைகள் இந்த தடுப்புச் சுவர் மீது மோதி சிதறடிக்கப்படும். இதனால் அலைகளின் தாக்கம் குறையும். கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

    இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தாங்கும் வகையில் உறுதியாக அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 3 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்படும். இது கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டமாகும். குறைந்த அளவிலான அலையின்போது கூவம் ஆற்றின் தண்ணீர் சீராக கடலில் கலக்கும். பெரிய அலைகளின் போது கடலில் உள்ள நீர் கூவத்தில் பாயும். இதனால் கூவம் ஆற்றின் நீர் இயற்கையாகவே சுத்தமாகிறது.

    பெரிய அலைகள் ஒன் றன்பின் ஒன்றாக ஏற்பட்டு கரையை அடையும்போது இந்த தடுப்புச்சுவர் அலையின் வேகத்தை குறைக்கின் றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்படாது.

    ஏற்கனவே கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்தில் ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மணலை கொண்டு வருகிறது. இதனால் எந்திரத்தை பயன்படுத்தி மண் மற்றும் சேற்றை அகற்ற வேண்டும். அப்போதுதான் கூவம் தண்ணீர் கடலுக்குள் செல்லும்.

    இந்த தடுப்பு சுவர் அமைப்பதால் கடலில் இருந்து வரும் மண்ணின் அளவு குறையும். இதனால் கூவத்தில் உள்ள தண்ணீர் தடையின்றி கடலில் கலக்கிறது. பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த கட்டமைப்பை மேற்கொண்டு வருகிறது. 3 முதல் 4 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேப்பியர் பாலத்தை பார்க்க தினமும் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
    • பாலத்தில் வரையப்பட்டுள்ள செஸ் கட்டங்களில் நின்று புகைப்படம், செல்பி, வீடியோ எடுக்கிறார்கள்.

    சென்னை:

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை நேப்பியர் பாலத்துக்கு கருப்பு, வெள்ளை நிறத்தில் செஸ் கட்டங்கள் வர்ணம் தீட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து நேப்பியர் பாலத்தை பார்க்க தினமும் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். பாலத்தில் வரையப்பட்டுள்ள செஸ் கட்டங்களில் நின்று புகைப்படம், செல்பி, வீடியோ எடுக்கிறார்கள்.

    கார்களை பாலத்தில் நிறுத்தி விட்டு புகைப்படங்கள் எடுக்கின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிறம் வந்ததும் மக்கள் நேப்பியர் பலத்தில் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள்.

    ஒரு வாலிபர், சாலையின் நடுவில் படுத்தப்படி இருந்து அவரது மனைவி புகைப்படம் எடுத்தார். இரண்டு இளம்பெண்கள் பாலத்தில் நடனமாடுவதை மற்ற நண்பர்கள் வீடியோ எடுத்தனர்.

    சில இளைஞர்கள் தங்களது கார்களை மெதுவாக ஓட்டி சென்று அதனை வீடியோ எடுக்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடும்பமாக பொதுமக்களும், மாணவர்களும் கூட்டமாக திரள்கிறார்கள் என்றனர்.

    நேப்பியர் பாலத்துக்கு தினமும் மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். இதனால் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் அதிகம் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுவதால் பாலத்தின் இருபுறமும் இரண்டு ரோந்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×