search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "narasimha mantra"

    நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடைகள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்.
    நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள், ஆனால் ஏதோ தடங்கள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான் இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

    “யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து
    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்
    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே”
    வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும். அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    ஓம் நமோ நாரஸிம்ஹாய
    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
    வஜ்ர தேஹாய நகாய ச

    முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.
    ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும்நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    வராத நல்வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும். அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும். 
    ×