என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "National Solidarity Day"
- சீனா-இந்தியா போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
- சீனா-இந்திய போர் நவம்பர் 21-ம் தேதி வரை நீடித்தது.
இந்தியாவில் அக்டோபர் 20 ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தான் 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இது இந்தியா-சீனா போராக உருவெடுத்தது.
இந்த போரில் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை பரைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சீன தாக்குதலை எதிர்கொண்டு தாயகத்தை காப்பாற்ற இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை இந்த நாளில் போற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
இதோடு 1962 சீனா-இந்தியா போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமை நாள் என்பது நம் தேசத்தை பாதுகாக்க ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை அனைத்து இந்தியர்களுக்கும் நினைவூட்டும் வகையிலான முயற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அக்டோபர் 20-ம் தேதி இந்தியாவின் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களை சீனா ஆக்கிரமித்த போது தொடங்கிய சீன-இந்திய போர் நவம்பர் 21-ம் தேதி வரை நீடித்தது. இதன் பிறகு, சீனா இந்தியா பிரதேசங்களில் இருந்து விலக துவங்கியது. இந்த போரில் இந்தியா தரப்பில் 3 ஆயிரத்து 250 வீரர்கள் கொல்லப்பட்டனர்.