search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NCBC bill"

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. #MonsoonSession #NCBCBill
    புதுடெல்லி:

    பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கொண்டு வரப்பட்டது . ஆனால், இந்த ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும், அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

    இந்நிலையில், இந்த ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா (123-வது திருத்தம்) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

    அவையில் இருந்த 156 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க, மசோதா எதிர்ப்பின்றி நிறைவேறியது. இதனை அடுத்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் இந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைக்கும். 
    ×