என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NCC"

    • ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி, கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற என்.சி.சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.சி.சி அணிவகுப்பை பார்வையிட்டதுடன், என்.சி.சி.-ன் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். கடந்த 75 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்த என்சிசி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியை பிரதமர் பாராட்டினார்.

    விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் நேரம் வந்துவிட்டது. இன்று உலகின் பார்வை நம் நாட்டை நோக்கி இருக்கிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் இந்தியாவின் இளைஞர்கள்தான். கடந்த 8 ஆண்டுகளில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் நமது பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பி.எஸ்.ஆர். கல்லூரி என்.சி.சி. மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    டெல்லியில் 75-வது இந்திய குடியரசு தின விழா முகாம் நடந்தது. இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் துறையை சேர்ந்த என்.சி.சி. மாணவரும், சீனியர் அண்டா் ஆபீசருமான ஆர்.சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் மற்றும் 2-ம் பரிசுகளை வென்றார்.

    ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நடந்த இந்த முகாமில் அகில இந்திய அளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்த முகாமின் போது நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பாட்டுப் போட்டியில் முதல்பரிசும், நடனப்போட்டியில் முதல் மற்றும் 2-ம் பரிசும் பெற்றார்.

    நிறைவுவிழாவில் பிரதமர் மோடி என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த முகாமின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் என்.சி.சி. தலைமை அதிகாரி லெப்டினட் ஜெனரல் குர்பீர் பால்சிங், மேஜர் ஜெனரல் ஷெராவத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    இந்திய அளவில் தமிழக அணி அதிக பரிசுகளை பெற்று, 2-ம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணியின் சார்பில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பரிசை பெற்றுக்கொண்டார்.

    வெற்றி பெற்ற மாணவரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் மாதவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
    • கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர்.

    ஆறுமுகநேரி:

    உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை தரைப்பிரிவு மற்றும் கடற்படை பிரிவு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    தேசிய மாணவர் படை தரைப்படை பிரிவு அலுவலர் சேக்பீர் முகமது காமில் வரவேற்று பேசினார். ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது மொய்தீன் போதை பொருட்களின் தீமைகளை குறித்து பேசினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு அலுவலர் ஜமால் முகம்மது நன்றி கூறினார்.

    • மண்ணில் மாணவர்களை படுக்க வைத்த சீனியர் மாணவர் லத்தியால் என்.சி.சி. மாணவர்களின் பின் பகுதியில் சரமாரியாக கம்பால் தாக்கி உள்ளார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள், என்.சி.சி. மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    தானே:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் பண்டோத்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள என்.சி.சி. மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அணிவகுப்பு பயிற்சியில் சில மாணவர்கள் சரியாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதை அந்த கல்லூரியின் என்.சி.சி. சீனியர் மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே அவர் பயிற்சியில் சரியாக செயல்படாத மாணவர்களை தனியாக அழைத்து சென்று தரையில் குப்புற படுக்க வைத்துள்ளார்.

    அப்போது அங்கு மழை பெய்துள்ளது. இருந்தபோதும் மண்ணில் அந்த மாணவர்களை படுக்க வைத்த சீனியர் மாணவர் லத்தியால் என்.சி.சி. மாணவர்களின் பின் பகுதியில் சரமாரியாக கம்பால் தாக்கி உள்ளார்.

    இதனால் அவர்கள் வலியால் துடித்து அலறினர். ஆனாலும் சீனியர் மாணவர் தொடர்ந்து அவர்களை கொடூரமாக தாக்கி உள்ளார். இதனை மற்ற வகுப்பு மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைப்பார்த்த பயனர்கள், என்.சி.சி. மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுசித்ரா நாயக் கூறியதாவது:-

    இதுபோன்ற நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சீனியர் மாணவர் நடந்து கொண்டுள்ளார். சக மாணவர்களை அவர் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் போலீசிலும் புகார் அளிக்கப்படும். அதே நேரம் என்.சி.சி. மூலம் இங்கு நிறைய நல்ல பணிகள் நடைபெற்றுள்ளது.

    சுமார் 40 ஆண்டுகளாக இங்கு என்.சி.சி. பயிற்சி நடக்கிறது. ஆசிரியர் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்டோர் மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வு பேரணி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி அச்சுந்தன்வயல் செக்போஸ்ட் வரை சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. தேசிய மாணவர் படை மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். பேராசிரியர்கள் ஜெயமுருகன், துரைப்பாண்டி, சந்திர சேகரன், மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் உத்திரசெல்வம் செய்திருந்தார்.

    • குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பன் தலைமையில் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 25 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பன் தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு 15-வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் அனில்வர்மா, நிர்வாக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி உத்திரவின் பேரில், சுபேதார் மேஜர் செந்தில்குமார், கம்பெனி ஹவில்தார் மேஜர் அப்துல் காதர் பங்கேற்று, 32 மாணவர்களை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி செய்திருந்தார்.

    இதில் மாணவர்களுக்கு ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தடகள போட்டி, ரிலே, உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நகர தி.மு.க. செயலாளர் செல்வம் பங்கேற்று தேர்வான மாணவர்களை பாராட்டி, அறிவுரை கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 25 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.  

    ×