என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ncp workers protest
நீங்கள் தேடியது "NCP workers Protest"
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னானது என்று தேசியவாத காங்கிரசார் நேற்று மும்பையில் போராட்டம் நடத்தினர். #PMModi #NCPProtest
மும்பை:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது, வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்து, பொதுமக்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று கூறியிருந்தார். மோடி பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகளை கடந்து, அவரது ஆட்சிக்காலம் நிறைவடையவும் உள்ளது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்குள்ள வங்கிகளுக்கு சென்று, தங்களது வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்பட்டு உள்ளதா என சரிபார்த்தனர்.
பின்னர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்ஜெய முண்டே தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #PMModi #NCPProtest #BlackMoney
×

X