என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ndrf launch
நீங்கள் தேடியது "NDRF launch"
கேரள மீட்பு பணியில் இதுவரை இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 58 அணியினரும் களம் இறங்கி மழை, வெள்ள மீட்பு, நிவாரண பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர். #NDRF #KeralaFlood
புதுடெல்லி:
தேசிய பேரிடர் மீட்பு படை 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த படையினர் கேரளாவில் மழை, வெள்ள மீட்பு, நிவாரண பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகின்றனர்.
எந்த ஒரு மாநிலத்திலும் எந்தவொரு இயற்கை பேரிடரிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் அத்தனை அணியினரும் களம் இறங்கியது கிடையாது. ஆனால் கேரளாவில் 55 அணிகள் களத்தில் உள்ளன. எஞ்சிய 3 அணிகளும் அங்கு விரைகின்றன. ஒவ்வொரு அணியிலும் சுமார் 40 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
கேரளாவில் இந்தப் படையின் மீட்பு பணி பற்றி அதன் செய்தி தொடர்பாளர் நேற்று கூறும்போது, “இதுவரை வெள்ள பாதிப்பில் இருந்து 194 பேர் எங்கள் படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர். 12 விலங்குகளும் மீட்கப்பட்டன. 10 ஆயிரத்து 467 பேர் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். 159 பேருக்கு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு முந்தைய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன” என்று குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறை, கேரளாவில் நடைபெற்று வருகிற மீட்பு, நிவாரண பணியினை இரவு, பகலாக கண்காணித்து வருகிறது. #NDRF #KeralaFlood

×

X