என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "negotiations"

    • மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
    • சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    மும்பை:

    மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.

    பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.

    இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.

    இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.

    இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.

    பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.

    சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.

    இவ்வாறு சரத்பவாா் கூறினார்.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.
    • ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். அப்போது ஆந்திரா தெலுங்கானா பிரிவினையால் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கானா பிரிவினைக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா தேர்தலில் போட்டியிடாமல் இருந்தது.

    தெலுங்கானாவில் பிரதான ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.

    ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதேபோல் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி பிரிவு மீண்டும் தொடங்கப்படும்.

    இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானாவில் மீண்டும் கட்சியை செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் அறிவித்தார். தெலுங்கானா மக்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என அவர் கூறினார்.

    தெலுங்கானா முதல்-மந்திரியுடனான சந்திப்புக்கு பிறகு அந்த மாநில அரசியலில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்துவது பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போர் நிறுத்தம் குறித்து நாங்கள் இல்லாமல் ஆலோசிப்பதா?
    • பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    கீவ்:

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா, ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    இதில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா-ரஷியா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியதாவது:-

    சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.

    பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

    உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. சவுதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரஷிய அதிபர் புதினை இந்த மாதத்தில் சந்திப்பேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • பண்ருட்டி அருகே சாலைபணி நிறுத்தியதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • சுமார் அறை மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறு வத்தூர் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதி மூலம் த.வா.க.கவுன்சிலர் விஜய தேவி தேவராஸ் எஸ்.ஏரிப்பாளையம் புதுநகர் பகுதியில் 7.5 லட்சம் மதிப்பில் தார் சாலை போடும் பணி தொடங்கி அந்த பணி தற்போது நடை பெற்று வருகிறது. அப்போது அங்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் முருகன் என்னிடம் எந்த தகவலும் கூறாமல் சாலை போடுவதால் பணியை நிறுத்த வேண்டும் என்றார். இதனால் த.வா.க.கவுன்சிலர் விஜயதேவிதேவராசு ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் எஸ்.ஏரிப்பாளையம் மெயின்ரோட்டில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அைற மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    • இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் 60 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரவு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவிலில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இ-நாம் என்று அழைக்கப்படும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை மூலம் விவசாயிகள் கொண்டு வரும் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 20ம் தேதி 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2 கோடியே 96 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 3225 குவின்டால் பருத்தியை விற்பனை செய்தனர்.

    இதற்கான தொகையை கடந்த 7ம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பெரும்பாலான விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் 60 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரவு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் பருத்தி ஏலம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த 60 விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த பருத்திக்கான தொகை ரூ.62 லட்சத்தை கொடுத்த பிறகு ஏலத்தை நடத்தி பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர்.

    இதனால் பருத்தி ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் 500 விவசாயிகள் சுமார் 1000 குவிண்டால் பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் கிடங்கில் பருத்தி மூட்டைகளை வைத்து தவித்து வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல் காரியாபட்டி யில் ரூ. 150 கோடி மதிப்பில் நவீன சாயப்பட்டறை அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதை கண்டித்தும், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் பேரணி செல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி வழங்காத மாவட்ட போலீசார் சிவகாசியில் தங்கியிருந்த சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்பட 30 பேரை இன்று காலை கைது செய்தனர்.

    இதேபோல் திருத்தங்கல், ஆமத்தூர் பகுதியில் பேரணிக்கு தயாராக இருந்த 120-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்த கைதை கண்டித்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே இன்று காலை சாலை மறியல் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சொக்கநாதன் மாவட்ட பொது செயலாளர் மொக்கராஜ் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தலைவர்கள் கருப்பையா சின்னச்சாமி பாக்கியராஜ் நகரச் செயலாளர் முத்தையா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் செய்தனர் போலீசார் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர் .ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #DMDK
    சென்னை:

    கோயம்பேட்டில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லதே நடக்கும். இந்த கூட்டணி அமையக்கூடாது என எதிரிகள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது.

    பா.ம.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் வேலைகளை சிலர் செய்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே திரித்து கோபம் வரும் அளவுக்கு சிலர் கருத்து சொன்னாலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடு தேர்தலை சந்திப்போம். கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். இது தேர்தல் கூட்டணி. தி.மு.க.-காங்கிரசை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தே.மு.தி.க. குறித்து சொன்ன கருத்து கட்சி கருத்து அல்ல. இதற்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #DMDK

    சிங்கப்பூரின் சென்டோசா தீவில் இன்று நடைபெற இருக்கும் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து உள்ளார். #Singaporesummit #DonaldTrump
    சிங்கப்பூர்:

    அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலம் கனிந்து இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு (இந்திய நேரம் காலை 6.30 மணி) சந்தித்து பேச்சுவார்தை நடத்துகிறார்கள். இதற்காக இரு தலைவர்களும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.



    வரலாற்று சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. இன்று நடைபெற இருக்கும் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுவதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    பேச்சுவார்த்தை முடிந்து, டிரம்ப் இன்று அமெரிக்கா திரும்புகிறார். ஒரு நாள் முன்னதாக உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அவர் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா திரும்புவதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. 
    ×