search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nervous diseases"

    முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
    பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.முக அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி பார்க்கலாம்.

    Bells Palsy or Facial palsy

    நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும்12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு எந்தப் பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம் சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.

    இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும் இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சனை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக இந்தப் பிரச்சனை ஏற்படும் போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

    வலிப்புக்காக எடுக்கும் மாத்திரைகள்

    நரம்பு வியாதியான வலிப்புக்கு மருந்தாக பயன்படும் PHENYTOIN என்ற மருந்தினை உட்கொள்பவர்களுக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவ்வாறு முகத்திலும் முடிவளர்ச்சி அதிகம் இருக்கும் போது பெண்களுக்கு அது அவர்களின் அழகை பாதிக்கும். சிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் உண்டாகும். அதுவும் அவர்களின் முகத்தோற்றத்தில் வித்தியாசத்தை உருவாக்கும். அதனாலேயே இந்த மாத்திரையை இளம் பெண்களுக்கு பெரும்பாலும் நரம்பு மருத்துவர்கள்பரிந்துரைப்பதில்லை. 
    ×