search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neutrally"

    வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamal #ElectionCommission #maduraigovernmenthospital

    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    கேள்வி:- வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்?

    பதில்:-தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் படவேண்டும் என்பது எல்லோருடைய எதிர் பார்ப்பும் கூட. அவர்கள் எல்லா கட்சியினரையும் அழைத்து பேசி இருக்கலாம். அப்படி செய்யாமல் வேட்பாளர்களிடம் மட்டும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அது தவறு. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்க கூடாது என்பதே எங்களது வலியுறுத்தல். எந்த திருத்தங்களாக இருந்தாலும் அவற்றுக்கான சரியான விளக்கங்கள் கொடுத்த பிறகே செய்யப்பட வேண்டும்.

    கே:- மதுரை மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் பலியான சம்பவம் பற்றி?

    ப:- சினிமா தியேட்டர் முதல் சின்ன சின்ன கடைகள் வரை ஜெனரேட்டர் வசதி இருக்கும்போது உயிரை காக்கும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமான வி‌ஷயம்.

    கே:- ஜெனரேட்டர் பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறதே?

    ப:- எல்லாமே இருக்கிறது. ஆனால் பழுதாகி இருக்கிறது என்பதுதான் அரசின் பிரச்சினையே...அரசே பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் என் கருத்து. அதை ஜெனரேட்டர் வைத்து சரி செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #kamal #ElectionCommission #maduraigovernmenthospital

    ×