search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new currency notes"

    புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி 2016-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை நடைபெற்றது. இதற்கு மத்திய அரசு ரூ.12,877 கோடி செலவு செய்துள்ளது. #CentralGovt #Demonetisation
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டபோது 15.41 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.

    அந்த ரூபாய் நோட்டுக்களில் கணிசமான அளவுக்கு அதாவது சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கருப்புப் பணமாக இருக்கும் என்று மத்திய அரசு நினைத்தது.

    ஆனால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் ரூ.15.31 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன. அந்த வகையில் ரூ.10,720 கோடிதான் வராத பணம் என்று தெரிய வந்தது.

    இதற்கிடையே பழை ரூபாய் நோட்டுக்களுக்கு பதில் மத்திய அரசு புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது. அந்த ரூபாய் நோட்டுக்கள் நவீன பாதுகாப்பு வசதியுடன் பல்வேறு வண்ணங்களில் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

    புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் இரவு பகலாக அச்சடித்து வெளியிடப்பட்டன. சில மாதங்கள் கழித்து புதிய 50, 10 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டு, அச்சடித்து வெளியிடப்பட்டன.


    புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி 2016-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை நடைபெற்றது. புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மத்திய அரசு ரூ.12,877 கோடி செலவு செய்துள்ளது.

    இதையடுத்து பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு மிகக் கடுமையான இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வங்கிக்கு வராத பணத்தை விட புதிய நோட்டுக்கள் அச்சடிக்க கூடுதலாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது.

    இந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை இல்லாத இழப்பாக கருதப்படுகிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் புதிய நோட்டு அச்சடித்த செலவு கூட தேறவில்லை என்று நிபுணர்கள் குறை கூறியுள்ளனர். #CentralGovt #Demonetisation
    ×