search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new tariff"

    • 2021ல் ஓலா, ஊபர் போன்ற சேவைகளுக்கு வெவ்வேறு விகிதம் விதிக்கப்பட்டிருந்தது
    • பீக் ஹவர் கட்டண வசூல் தடை செய்யப்பட்டுள்ளது

    கர்நாடக மாநில அரசு, வாடகை கார்களுக்கான பயண கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது.

    2021ல், ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலி மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கும், இதர வாடகைக் கார் சேவைகளுக்கும் வெவ்வேறு விகிதங்களில் கட்டணங்கள் வசூலிக்கபட்டன.

    ஆனால், இம்முறை அனைத்து விதமான வாடகைக் கார் பயண கட்டணங்களுக்கும் ஒரே சேவைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை அளித்திருக்கும் கட்டண விகிதம் வருமாறு:

    ரூ.10 லட்சம் மதிப்பிற்கு உட்பட்ட வாகனங்களுக்கான கட்டணம்

    முதல் 4 கிலோமீட்டர் - ரூ.100 (முந்தைய கட்டணம் ரூ.75)

    4 கிலோமீட்டரை கடந்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் - ரூ.24

    ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிற்கு உட்பட்ட வாகனங்களுக்கான கட்டணம்

    முதல் 4 கிலோமீட்டர் - ரூ.115

    4 கிலோமீட்டரை கடந்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் - ரூ.28

    ரூ.15 லட்சம் மதிப்பிற்கு அதிகமான வாகனங்களுக்கான கட்டணம்

    முதல் 4 கிலோமீட்டர் - ரூ.130

    4 கிலோமீட்டரை கடந்து ஓவ்வொரு கிலோமீட்டருக்கும் - ரூ.32

    இவை தவிர ஜிஎஸ்டி (GST) மற்றும் சுங்க சாவடி கட்டணங்கள் சேர்த்து வசூலிக்கப்படும்.

    மேலே கூறப்பட்ட கட்டணங்களுடன் 10 சதவீதம் கூடுதலாக இரவு நேர பயணங்களுக்கு (இரவு 12:00 மணியில் இருந்து காலை 06:00 வரை) வசூலிக்கப்படும்.

    முதல் 5 நிமிடங்களுக்கு காத்திருப்பு கட்டணம் (waiting charges) கிடையாது. 5 நிமிடங்கள் கடந்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 வசூலிக்கப்படும்.

    பீக் ஹவர் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

    பயணத்திற்கு ஆகும் நேரத்தை கணக்கிடவும் தடை விதித்துள்ள போக்குவரத்து துறை, பயண தூரத்திற்கு மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டணைத்தை வசூலிக்க ஓட்டுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், இப்புதிய கட்டண விகிதத்தால், பயணிகள் அதிக தொகை தர வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் அறிவித்துள்ளது. #TRAI #CableTV
    புதுடெல்லி:

    கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது.

    இந்நிலையில், கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் இன்று அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி அவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #TRAI #CableTV
    மேலும் ரூ.14 லட்சம் கோடி சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #DonaldTrump #ChinaTariffs
    வாஷிங்டன்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது.

    சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா புகார் கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் புகாரை மறுத்து வருகிறது.

    ஆனாலும்கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை சரிகட்டுவதற்கு, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து செயல்படுத்தி வருகிறது.



    தொடர்ந்து சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக கூடுதல் வரி விதித்தது.

    இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என தெரிய வந்து உள்ளது.

    இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறும்போது, “சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார். அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.

    அமெரிக்க கருவூல மந்திரி ஸ்டீவன் மனுசின், சீனாவுடனான வர்த்தக பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும்கூட, சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டிரம்ப் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் சீனாவின் 267 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த 7-ந் தேதி எச்சரித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.  #DonaldTrump #ChinaTariffs
    ×