search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nigerian parliament election"

    நைஜீரியா நாட்டின் அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற முஹம்மது புஹாரி தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார்.
    அபுஜா:

    ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள்தொகை கொண்ட நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் 360 கீழ்சபை மற்றும் 109 மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும் சேர்த்து கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

    இந்த தேர்தலில் அந்நாட்டின் வரலாறில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.
     
    வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதையை அதிபர் முஹம்மது புஹாரி (76) மீண்டும் வெற்றி பெற்றார்.

    எதிர்க்கட்சி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான மஹ்மூத் யாக்குபு சுமார் ஒருகோடியே 13 லட்சம் வாக்குக்ளை (41சதவீதம்) பெற்று தோல்வியை தழுவினார்.

    அதிகாரப்பூர்மாக வெளியான இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் முஹம்மது  புஹாரியின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளன. 

    இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக நைஜீரியா அதிபராக முஹம்மது புஹாரி இன்று பதவியேற்றார்.
    ×