search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirmala Devi Issue"

    தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை கவர்னர் தன் பதவியில் இருக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    கமல்ஹாசன் 3 நாட்கள் பயணமாக இன்று சேலம் புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:-

    கேள்வி:- மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்களே?

    பதில்:- நாடகம் போடுபவர்களே மழையை பொருட்படுத்தாமல் போடுவார்கள். அந்த தைரியம் சினிமா, நாடகக்காரர்களுக்கே இருக்கிறது. மழையை ஒரு காரணமாக காட்டி தேர்தலை தள்ளி போடலாமா? என்பது என் கேள்வி.



    கே:- நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனர் பெயர் அடிபடுகிறதே?

    ப:- நிர்மலாதேவி வி‌ஷயத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் ஆளுனர் பதவி விலக வேண்டும். தைரியமான அரசியல்வாதிக்கு அதுதான் அழகு. தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை அவர் தன் பதவியில் இருக்கக் கூடாது. ஆளுனர் என்பவர் மிகவும் ஜாக்கிரதையாகவும் மரியாதையாகவும் பேச வேண்டும்.

    கே:- சிலை கடத்தல் வழக்கு பரபரப்பாகி இருக்கிறதே?

    ப:- வெகுநாட்களாக நடந்து வந்து இருக்கிறது என்றுதான் அர்த்தம். கோவிலில் இருப்பவர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள். அவர்கள் அனுமதி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. கோயிலுக்கு சொந்தமான சிலைகள் நம்முடைய சொத்து. தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் உதவ முன் வந்தபோதும், எங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என தட்டிக்கழித்து விட்டனர்.

    கே:- மீடூ என்ற பாலியல் தொல்லை விவகாரத்தில் தமிழகத்திலும் சில பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் திரைத்துறையினர் கருத்து சொல்லவில்லையே?

    ப:- இந்த விவாகரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் தான் கருத்து சொல்லவேண்டும். எல்லோரும் கருத்து சொல்வது தவறு. மீடூ என்ற இயக்கம் மூலம் உண்மைகள் வெளிவந்து பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். கண்ணகி காலத்தில் இருந்தே இந்த பிரச்சினை இருக்கிறது.

    கே:- ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை தந்துவிட்டோம் என்று நிதின் கட்காரி கூறி இருப்பது?

    ப:- உண்மையை பேசக்கூடிய சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

    கே:- ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறாரே?

    ப:- அது வெறும் பேச்சு மட்டும் தான்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    ×