search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "No Tie-Up"

    காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி திட்டவட்டமாக கூறினார். #Mayawati #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி திட்டவட்டமாக கூறினார். #Mayawati #Congress

    நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு களம் இறங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பல்வேறு பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து போவதை தடுக்க இது உதவும் என கருதப்பட்டது.

    ஆனால் இந்த முயற்சி, எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

    நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியும் கரம் கோர்த்துள்ளன.

    இந்த நிலையில், டெல்லியில் தனது கட்சியை சேர்ந்த பல்வேறு மாநில தலைவர்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி நேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளாது.

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளேன் என்றால் அது பரஸ்பர மரியாதை, நேர்மையான நோக்கங்கள் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியானது, பாரதீய ஜனதாவை தோற்கடிப்பதற்கு சரியான கூட்டணி ஆகும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அந்த கட்சியை தோற்கடிப்போம். பல தலைவர்கள், நமது கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் தேர்தல் லாபத்துக்காக மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி எதையும் செய்யாது. ஏனென்றால் அது பகுஜன் சமாஜ் இயக்கத்துக்கு கேடாக அமைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×