search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nokia 7 Plus"

    நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து பயனர் விவரம் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹெச்.எம்.டி. குளோபல் பதில் அளித்துள்ளது. #HMDGlobal



    நோக்கியா ஸ்மார்ட்போன்களில் இருந்து சீனாவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது, நோக்கியா மொபைல் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஃபின்லாந்தின் தகவல் பாதுகாப்பு நிறுவனம் நோக்கியா மொபைல் போன்கள் விதிகளை மீறியதா என்பதை ஆய்வுக்கு பின் அறிவிப்பதாக தெரிவித்தது. 

    இந்த விவகாரத்தில் புதிய தகவல்களுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தகவல் திருட்டில் பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான பதில் இடம்பெற்றிருக்கிறது. மென்பொருள் கோளாறு காரணமாக இந்த பிழை ஏற்பட்டது, எனினும் இதில் எவ்வித தகவலும் மூன்றாம் தரப்புக்கு பகிர்ந்து கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    “நாங்கள் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ததில், ஒரு பங்கு நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சீன வேரியண்ட்களில் இடம்பெறும் டிவைஸ் ஆக்டிவேஷன் குறியீடுகள் இடம்பெற்றிருந்தன. இவை தவறுதலாக மூன்றாம் தரப்பு சர்வெருக்கு தகவல்களை அனுப்ப முயன்றன. எனினும், இந்த தகவல்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதில் பயனரின் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.” என ஹெச்.எம்.டி. குளோபல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த பிழை பிப்ரவரி மாதத்திலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து சாதனங்களிலும் பிழை அப்டேட் மூலம் கிட்டத்தட்ட சரி செய்யப்பட்டுவிட்டன. நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழை சரி செய்யப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அபவுட் போன் -- பில்டு நம்பர் உள்ளிட்டவற்றை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ‘00WW_3_39B_SP03' or ‘00WW_3_22C_SP05'  என்ற பில்டு நம்பர் வந்திருந்தால் உங்களது நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே பிழை சரி செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை உங்களது மொபைல் அப்டேட் செய்யப்படவில்லை எனில், ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அட்வான்ஸ்டு -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்து மொபைலை அப்டேட் செய்ய வேண்டும்.

    நோக்கியா 7 பிளஸ் தவிர மற்ற நோக்கியா போன்களிலும் இதேபோன்ற பிழை ஏற்பட்டதாக வெளியான தகவல்களை ஹெச்.எம்.டி. குளோபல் மறுத்திருக்கிறது. மேலும், சீனா வேரியன்ட் தவிர மற்ற நோக்கியா போன்களின் விவரங்களும் ஹெச்.எம்.டி. குளோபல் சர்வர்களில் சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா மொபைல் போன் இந்தியாவில் அக்டோபர் 11-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய மொபைல் போன் அக்டோபர் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    இதற்கென அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசரில் பண்டிகை காலத்திற்கு முன் முக்கிய அறிவிப்பு என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது.



    புதிய அறிவிப்பை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதே ஸ்மார்ட்போன் X7 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நோக்கியா 7.1 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் FHD+ 19:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் அல்லது அமேசான் வலைதளங்களின் ஒன்றில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×