search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nokia 8.1"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது மிட் ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Nokia81



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

    கடந்த மாதம் அறிமுகமான நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ், சோனி IMX363 சென்சார், f/1.8, OIS, 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.8μm பிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

    ஏ.ஐ. பியூட்டி மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 6 ஏ.ஐ. ஸ்டூடியோ லைட், ஏ.ஐ. எக்ஸ்பிரஷன், டூயல்-வியூ மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 6 சீரிஸ் அலுமினியம்-மக்னீசியம் அலாய் ஃபிரேம், கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.55″ சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் புளு/சில்வர் மற்றும் ஐயன்/ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 8.1 விலை ரூ.26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், டிசம்பர் 21ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    அறிமுக சலுகைகள்:

    ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 ஜி.பி. கூடுதல் 4ஜி டேட்டா
    ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் 4ஜி டேட்டா
    தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10% கேஷ்பேக்
    சர்விஃபை வழங்கும் ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் வசதி  #Nokia81 #NokiaMobile
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. #NokiaMobile #smartphone



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி நோக்கியா 8.1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் சர்வதேச எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக நோக்கியா X7 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 ரக பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ், சோனி IMX363 சென்சார், f/1.8, OIS, 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் வசதி கொண்டிருக்கும் இந்த கேமரா புகைப்படங்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கிறது.

    செல்ஃபி எடுக்க 20 எம்.பி. கேமரா, f/2.0, 1.8μm பிக்சல், ஏ.ஐ. பியூட்டி, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 6 ஏ.ஐ. ஸ்டூடியோ லைட்கள் மற்றும் டூயல் வியூ மோட் கொண்டிருக்கிறது. 6 சீரிஸ் அலுமினியம்-மக்னீசியம் அலாய் ஃபிரேம், கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 8.1 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.



    நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 9.0 (பை)
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் புளு/சில்வர், ஸ்டீல்/காப்பர், ஐயன்/ஸ்டீல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. நோக்கியா 8.1 சர்வதேச எடிஷன் விலை 399 யூரோக்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.31,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. #NokiaMobile #smartphone
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #nokiamobile



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய சாதனத்தை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. முன்னதாக டிசம்பர் 6ம் தேதி நடைபெற இருந்த இவ்விழாவில் அந்நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் நோக்கியா 7.1 சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

    அந்த வகையில் டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டிசம்பர் 5ம் தேதி ஹெச்.எம்.டி. குளோபல் துபாயில் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் துபாய் விழாவில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 2.1 பிளஸ், நோக்கியா 9 உள்ளிட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. மேலும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 28ம் தேதி அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது.



    நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + பியூர்டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.8, 1.4μm பிக்சல், OIS
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ ரெக்கார்டிங்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Nokia #smartphone



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 2017ம் ஆண்டில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நோக்கியா 8 சிரோக்கோ எடிஷன் வெளியிடப்பட்டது. 

    அந்த வரிசையில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் கூகுள் ஏ.ஆர். கோர் கொண்டு இயங்கும் என முன்னதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

    நோக்கியா 8.1 தவிர ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனும் ஏ.ஆர். கோர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த வசதி கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருந்தது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஒன் சான்று பெற்ற சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.



    டிஸ்ப்ளே நாட்ச், மெட்டல்-கிளாஸ் பாடி கொண்டு உருவாகும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பார்க்க நோக்கியா 7.1 பிளஸ் போன்று காட்சியளிக்கிறது. நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் நோக்கியா X7 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் நிலையில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருந்தது. புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய நோக்கியா 8.1 தவிர ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், ஐந்து பிரைமரி கேமரா செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ×