search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nominee mlas case"

    புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜூலை மாதம் 2-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை 3 நியமன எம்.எல். ஏ.க்களை நியமிக்கும்.

    மத்திய உள்துறை கடந்த ஜூலை மாதம் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சட்டசபைக்கு நேரடியாக நியமித்தது.

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை அதிகாரம் பெற்ற நபரிடம் இருந்து தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்து விட்டார்.

    மத்திய அரசின் நேரடி எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் எம்.எல். ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய உள் துறைக்கு உள்ளது என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

    ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மேல் முறையீடு செய்தார். ஏப்ரல் 6-ந் தேதி மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அப்போது விசாரணையை மே 17-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபலும், மத்திய அரசின் சார்பில் வக்கீல் பாலசுப்பிரமணியனும் ஆஜராகினர்.

    மத்திய அரசு தரப்பில் காவிரி வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி உள்ளதால் இந்த வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்குமாறு வக்கீல் பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    முக்கிய வழக்குகள் பிற்பகலில் விசாரணைக்கு வர இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து ஜூலை 2-வது வாரத்துக்கு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    ×