search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Africa"

    6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியிருக்க வாய்ப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #HumanEvolution

    அல்ஜியர்ஸ்:

    பூமியில் மனிதர்கள் தோன்றியது எங்கு? எப்போது? என்பது குறித்த பல்வேறு சர்ச்சைகளும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

    சமீபத்தில் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டது. அதில் அல்ஜீரியா உள்பட சர்வதேச நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து கிழக்கே 300 கி.மீ. தொலைவில் உள்ள செடிப் என்ற இடத்தில் கற்களால் ஆன கூர்மையான ஆயுதங்கள் கிடைத்தன.

    இவை தவிர விலங்குகளின் வெட்டப்பட்ட எலும்புகளும் சிக்கின. இவற்றை ஆய்வு செய்தனர். இதில் அவை கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் என கண்டறியப்பட்டது. இதே போன்ற ஆயுதங்கள் ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    வெட்டப்பட்ட விலங்குகளின் எலும்புகள் பழங்கால முதலைகள், யானைகள் மற்றும் நீர் யானைகளுடையது என்றும் தெரிய வந்துள்ளது. அவை வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    முந்தைய ஆய்வின்படி 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாததையர்கள் வேட்டையாட பயன்படுத்திய கற்கால ஆயுதங்கள் போன்றே இவையும் உள்ளது. எனவே கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மூதாதையர்கள் இவற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் மனிதர்கள் 24 லட்சம் ஆண்டுகள் அல்லது 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என 2 விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.

    வட ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் சோனா பகுதியில் உள்ள அய்ன்லானோக் என்ற இடத்தில் ஆதிகால மனிதர்கள் உருவாகியிருக்கலாம். அவர்கள் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் முகமது சகோனி உறுதிபட தெரிவித்துள்ளார். #HumanEvolution

    ×