search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Indian Labour"

    • வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
    • அக்கம் - பக்கத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதுசூதன் பிரதான் என்பவரது மகன் தவன்குமார் பிரதான்( வயது 26) .இவர் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்துக் கொண்டு, அதே பகுதியில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து மன வேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வெளியே சென்று இருந்த அவரது மனைவி சுமித் ஜனா, வீட்டிற்கு திரும்பிய போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் - பக்கத்தினர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுமித் ஜனா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • டாட்டூ தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளார்.
    • காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    பல்லடம் :

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :- பல்லடம் அருகே சின்னக்கரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷாஜி மண்டல் என்பவரை கடத்தி அவரிடமிருந்து பணம் பறித்த வழக்கில் டாட்டூ தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவர் மீது சென்னை, திருப்பூர், பெருமாநல்லூர், பல்லடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா முன்மொழிவின்படி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் பரிந்துரையின் பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

    இதனைத் தொடர்ந்து டாட்டூ தினேஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதற்கான உத்தரவுக் கடிதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாட்டூ தினேஷிடம் வழங்கப்பட்டது.

    • கோழிப்பண்ணையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவராஜ்(வயது 18). இவர் பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோழி பண்ணையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுவராஜ் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க கணவன்- மனைவி இருவரும் வந்துள்ளனர்.
    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    பல்லடம் :

    உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் விஸ்வகர்மா(வயது 50). இவர் கோடங்கி பாளையம் கல்குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க கணவன்- மனைவி இருவரும் வந்துள்ளனர். பின்னர் மனைவியை பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு, வேறொரு தொழிலாளியுடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமி மில் பகுதியில் இருந்து கோடங்கிபாளையம் நோக்கி சென்றார்.

    ஆறாகுளம் பிரிவு அருகே உள்ள பேக்கரியில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அங்கு டீ குடித்துவிட்டு தீபக் விஸ்வகர்மா மட்டும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தீபக் விஸ்வகர்மா உயிரிழந்தார். 

    • கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டுள்ளனர்.
    • சட்டை பையில் இருந்த 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள குன்னாங்கல் பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் கசாம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சின்னக்கரையில் உள்ள பள்ளிவாசல் அருகே இரவு நடந்து வந்துள்ளார்.அப்போது அவரை வழி மறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டுள்ளனர்.செல்போனை அறையில் வைத்து விட்டு வந்ததாகவும்,பணம் இல்லை எனவும் அப்துல் கசாம் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அப்துல் கசாமை தாக்கி அவரது சட்டை பையில் இருந்த 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் அப்துல் கசாம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய வால்பாறையை சேர்ந்த ராம் பிரகாஷ்(22),ஆகாஷ்(18),திருநெல்வேலியை சேர்ந்த பேச்சியப்பன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×