என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "north tamilnadu"
- மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும்.
தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (06-10-2024)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வருகிற 26-ந்தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றமும் அதிகம் காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இன்று அதிகாலையில் மழை பெய்த நிலையில் தொடர்ந்து மழை தூறல் காணப்பட்டது.
எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அடையார், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. #ChennaiRains
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்