என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » noyyal area
நீங்கள் தேடியது "noyyal area"
நொய்யல் அருகே வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 26 பவுன் நகை மற்றும் காரை திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). இவர் தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தர். பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தனார். இன்ஸ் பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும் மாயமான கார் குறித்த தகவல்கள் பிற மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் மதுரையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சம்பந்தப்பட்ட காரை போலீசார் மடக்கினர். அந்த காரில் 3 வாலிபர்கள் இருந்னர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆரப்பாளையத்தை சேர்ந்த பட்டறை சுரேஷ் (29) என்பது தெரியவந்தது.
போலீசர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த வினோத் (29), திருச்சி துவாக்குடியை சேர்ந்த டேவிட் (30) ஆகியோருடன் இணைந்து நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள வீட்டில் 26 பவுன் நகைகள், கார் ஆகியவற்றை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மதுரை நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்து பட்டறை சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார். மேலும் அவரிடம் இருந்த 26 பவுன் தங்க நகை யையும் மீட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், டேவிட் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நொய்யல் பகுதியில் தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, குளத் துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னைந்தோப்புகளை வைத்துள்ளனர்.
இவர்கள் தேங்காய்கள் விளைந்ததும், அவற்றினை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை வெயிலில் போட்டு காய வைக்கின்றனர். பின்னர் அவற்றை சாலைப்புதூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று, ஏல அடிப்படையில் விற்பனை செய்கின்றனர்.
இதனை தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வியாபாரிகளும் அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்தவாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.10,400-க்கு வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் நொய்யல் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X