search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NRC issue"

    அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    கவுகாத்தி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டனர்.  சுமார் 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போரை விளைவிக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து ராய் உள்பட 8 பேர் கச்சார் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

    ஆனால், அங்கு தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் குழுவினரை தடுத்து நிறுத்தியுள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். 

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,  மக்களை சந்திக்க செல்வது எங்களின் ஜனநாயக கடமை. விமான நிலையத்தில் எங்கள் குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை பார்த்தால் இங்கு சூப்பர் எமர்ஜென்சி நிலை நிலவுகிறது போல் தெரிகிறது என ஆவேசமாக பேசினார். #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
     
    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.



    நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங் பேச எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது.

    இந்நிலையில், அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

    அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். #RajyaSabhaadjourned  #AssamNRC
    அசாமில் நடந்ததுபோல் மேற்கு வங்காளத்திலும் நிகழ்ந்தால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என மத்திய அரசை மம்தா பானர்ஜி இன்று எச்சரித்துள்ளார். #NRCBill #MamatameetsRajnathSingh #Mamatawarns #Mamatacivilwar
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சுமார் 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இன்றும் இதே பிரச்சனையால் மாநிலங்களவை முடங்கியது.

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    குறிப்பாக, அசாம் மாநிலத்திற்குட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராமகாந்த் தியோர், அனந்த்குமார் மல்லா மற்றும் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது குடும்பத்தினரின் பெயர்கள் இந்த வரைவு பட்டியலில் இடம்பெறாததற்கு மம்தா கண்டனம் தெரிவித்திருந்தார்.

    அசாம் மாநில குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குடியேற வந்தால் அனுமதிப்பீர்களா? என்னும் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அவர்கள் அசாம் மாநில பூர்வவாசிகள்.

    அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அங்கேயே வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.  மேற்கு வங்காளத்தில் குடியேற அவர்கள் கோரிக்கை வைக்கும்போது இதுதொடர்பாக  மேற்கு வங்காளம் மாநில அரசு பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறினார்.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, இன்று டெல்லி செல்லும்போது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிக்கப் போவதாகவும் கூறினார்.

    மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்த சில பா.ஜ.க. பிரமுகர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் இதுபோன்ற குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என குறிப்பிட்டனர்.

    இந்நிலையில், டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, இன்றிரவு மத்திய உள்துறை மந்திரி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா, ‘தேசிய குடிமக்கள் மசோதாவில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அல்லது, புதிய மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன். மக்களை நாங்கள் தேவையில்லாமல் துன்புறுத்த மாட்டோம் என்று அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார்’ என்றுதெரிவித்தார்.

    அசாமில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்புபோல் மேற்கு வங்காளத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்தும் அவருடன் நான் பேசினேன். அப்படி நடந்தால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என நான் அவரிடம் கூறினேன் என்றும் மம்தா குறிப்பிட்டார்.

    அவரது இந்த பேட்டிக்கு சிறிது நிமிடங்களுக்கு பின்னர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி., ராம் மாதவ், ‘இந்த பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் 2 மாதங்களுக்குள் தங்களது நாட்டுக்கு திரும்பிப் போக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையான இந்திய குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் உரிய முறையில் மனு செய்து தங்களது பெயர்களை பட்டியலில் இணைக்கலாம்.

    உலகில் எந்த நாடும் தங்களது எல்லையில் ஊடுருவல்களை சகித்து கொள்வதில்லை. ஆனால், நமது நாட்டில் சில அரசியல்வாதிகள் ஊடுருவுபவர்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு உள்நாட்டுப்போர் வரும் என்று மிரட்டுகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.  #NRCBill #MamatameetsRajnathSingh #Mamatawarns #Mamatacivilwar #tamilnews
    என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து நேற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறவில்லை. மக்களவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.



    இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவு விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது. மாநிலங்களவை இன்று துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு என்ஆர்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என தலைவர் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    மேலும், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு  தெரிவித்தார். #AssamNRC #RajyaSabhaAdjourned
    ×