search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nuclear program"

    ஈரான் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DonaldTrump #NuclearProgram #HassanRouhani
    வாஷிங்டன்:

    ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக செவ்வாய் அன்று அறிவித்தது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதிக்கிறது. ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி, ‘ஈரான் நாடு யூரேனியம் செறிவூட்டலை எந்த வரம்பும் இன்றி தொடரும், ஆனால், தற்போது அதை  செய்வதை தவிர்க்கிறோம்’ என தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்பிடம்,  ஈரான் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த டிரம்ப், “ஈரான் அணு ஆயுத சோதனையை தொடங்கக்கூடாது என நான் அந்நாட்டுக்கு அறிவுறுத்துவேன். ஆனால், அவர்கள் அணு ஆயுத சோதனையை தொடரும் பட்சத்தில் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். #DonaldTrump #NuclearProgram #HassanRouhani
    ×