என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Lady"

    • கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி

    பானுமதி (வயது 65). பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டார்.

    இதனால் வறுமையில் வாடிய பானுமதி பிழைப்பிற்காக வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.

    தினமும் அதிகாலையில் மாட்டின் பாலை கறந்து இப்குதியில் உள்ள கடைகளுக்கு சென்று கொடுப்பது இவரது வழக்கம். வழக்கம் போல் இன்று காலையும் மாட்டின் பாலை கறந்து கடைக்கு கொடுப்பதற்காக கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் பானுமதியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து பானுமதி திருவோணம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகைபறிப்பில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் திருவோணம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது67). இவர் அதே பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வண்டியூர் சி.எஸ்.ஆர். தெரு பாலச்சாமி மகன் விஜய் (வயது26). இவர் வண்டியூர் மெயின் ரோடு மாநகராட்சி வாட்டர்டேங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5400-ஐ வழிப்பறி செய்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து விஜய் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • ஓய்வூதியம் பெறும் ஆவணங்களை கேட்டு மூதாட்டியிடம் நகை திருடப்பட்டது.
    • நூதன திருட்டில் ஈடு பட்ட கில்லாடி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகர் அன்ன–காமு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி தேவகி (வயது 73). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள–னர். அவர்களுக்கு திருமண–மாகி வெளியூர்களில் குடும் பத்துடன் வசித்து வருகின் றனர்.

    கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக தேவகி வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார்.

    அவர் தன்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி அறிமுகம் செய்துகொண் டார். பின்னர் தேவகியிடம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியதோடு, பக்கத்து தெருவில் உள்ள அலுவலகத்திற்கு அதிகாரி வந்துள்ளார்.

    அவரை பார்க்க வருமாறும், வரும்போது கழுத்தில் நகை எதுவும் அணிந்து வரக்கூடாது, எனவே நகையை கழுற்றி சாமி படத்திற்கு முன்பாக வைத்து–விடுமாறும் தெரிவித்துள் ளார். அதன்படி தேவகி நகையை கழற்றி வைத்ததும் பின்னால் சென்ற கில்லாடி பெண் அதனை அபேஸ் செய்துவிட்டு தலைமறை–வானார். நகையை பறிகொடுத்த தேவகி கொடுத்த புகாரின் பேரில் நூதன திருட்டில் ஈடு பட்ட கில்லாடி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லிடைக்குறிச்சி நதியுண்ணி கால்வாயில் பெண் உடல் ஒன்று இறந்த நிலையில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நதியுண்ணி கால்வாயில் பெண் உடல் ஒன்று இறந்த நிலையில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் உடலை மீட்டனர். தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரம் தெருவை சேர்ந்த தர்மாம்மாள் (வயது 80) என்பது தெரியவந்தது. அவர் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கரம்மாள் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
    • இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூரை சேர்ந்தவர் சுப்பையா மனைவி சங்கரம்மாள் (வயது 69). இவர் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லெட்சுமி காந்தன், சங்கரம்மாளை கீழே தள்ளி தாக்கினார். இதனால் காயமடைந்த சங்கரம்மாள் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மூதாட்டியை தாக்கிய லெட்சுமி காந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அம்மாகண்ணு(80). இவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து வந்து சாலையை கடக்க முயன்ற போது பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பகண்டை கூட்டு ரோடுசப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பிரபு, அவரது மனைவி ரம்யா ஆகியோர் செல்வியை அவதூறாக பேசி தாக்கினர்.
    • காயம் அடைந்த செல்வி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் ஏழாங்கால், மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி செல்வி (வயது62). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சித்திரைவேல் மகன் பிரவு, அவரது மனைவி ரம்யாவிற்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து செல்வி வீட்டில் இருக்கும் போது, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பிரபு, அவரது மனைவி ரம்யா ஆகியோர் செல்வியை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக பிரபு, அவரது மனைவி ரம்யாவை தேடி வருகின்றனர்.

    • மூதாட்டியின் வீட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை ஊராட்சி சேண்டல்பெரியான் கிரா மத்தைச் சேர்ந்தவர் கண் ணப்பன் மனைவி கண்ணாத் தாள் (வயது 70). இவர் தேவகோட்டை தினசரி காய்கறி மார்க்கெட்டில் சாலை யோரத்தில் வியாபா ரம் செய்து வருகிறார்.

    தினமும் தனது கிரா மத்தில் உள்ள வீட்டில் இருந்து அதிகாலையில் தேவகோட்டை தினசரி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்துவிட்டு மதியம் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள் ளார். நேற்று வழக்கம்போல் காய்கறி விற்பனை செய்ய அதிகாலையில் சென்று விட்டு மதியம் சுமார் 2 மணி அளவில் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப் போது உள்ளே இருந்த இரண்டு பீரோக்களும் உடைத்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின்கள் ரொக்க பணம் ரூ.10,000 ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரட்டை கொலை செய்து வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தால் தேவகோட்டை மக்கள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மூதாட்டி வீட்டில் நகை கொள்ளை சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

    • செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
    • சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).

    மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலியின் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.
    • ராஜேஷ் என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணை தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி ஜெயசீலி (வயது 70). இவர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயசீலி அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்படி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி முத்தையாபு ரம் சந்தோஷ்நகரை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    உடனே தனிப்படை போலீசார் ராஜேசை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 5½ பவுன் தங்க செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • கண்ணம்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பசுவனபுரம் கரலியம் ரோடு அருகே மது விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிறப்புப் இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா மற்றும் போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கண்ணம்மா (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கி உள்ளார்.
    • மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றனர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமம் அண்ணா சாலை தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருதாயி (வயது 70).

    இவர் கீற்று கயிறு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    இவரது மகள், மகன்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இருதாயி தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே படுத்து உறங்கி உள்ளார்.

    நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் இருதாயி முகத்தை துணியை போட்டு மூடிவிட்டு அவரை தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர்.

    காயங்களுடன் மயங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தோடு உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

    காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×