என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "old man"
- முதியவரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருடன் தப்பி ஓட்டம்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த திருடன் முதியவரை பிடித்து வைத்துக்கொண்டு கொலை செய்துவிடுவதாக அக்கம் பக்கத்தினரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கிராமத்தில் ஐயாமுத்து என்ற 86 வயதுடைய முதியவர், அவருடைய மனைவி லட்சுமி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
திடீரென நேற்று இரவு அதேபகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சித்துள்ளார். இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வயதானவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததும் முதியவரை காப்பாற்றுவது போல் நடித்துள்ளர். அருகில் உள்ள பொருட்களை எடுத்து வீசியும், முதியவரின் கழுத்த பிடித்து இறுக்கியும் மிரட்டல் விடுத்தார்.
அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது பலத்த காயம் அடைந்த முதியவர் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பாஜக தலைவர் பிர்பால் சிங் மகன் அபினவ் சிங், வயதான தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது
உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த சிசிடிவி வீடியோவில், முதியவரை மிரட்டும் அபினவ் அவரது கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் அந்த முதியவர் நிலை தடுமாறுகிறார்.
சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முதிய தம்பதிக்கும் அபினவுக்கும் என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகவில்லை.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது. ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார்.
- அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
புனேவில் ஜெரலின் டி சில்வா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னே வந்த கார் இவரை முந்தி செல்ல முயற்சித்தது. ஆனால் முந்தி செல்ல முடியாமல் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரின் பின்புறம் கார் சென்றுள்ளது. இதனால் காரை ஓட்டி வந்த முதியவர் கோவமடைந்துள்ளார்.
பின்பு ஸ்கூட்டருக்கு முன்பு காரை நிறுத்தி இறங்கிய முதியவர் கோபத்துடன் அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அப்பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
வீடியோ வைரலானதை அடுத்து, தாக்கிய முதியவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.
- தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள சிப்ரி பஜார் பகுதியில் ஒரு முதியவர் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சிப்ரி பஜாரில் சற்று நெரிசலான ஒரு குறுகிய தெருவில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வெள்ளை நிற கார் திரும்புவதைக் காட்டுகிறது. ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.
முதியவர் வலியால் அலறியபோது 70 வயது முதியவரை சில மீட்டர்கள் இழுத்துச் சென்ற SUV டிரைவர் சக்கரங்களுக்கு அடியில் இருப்பது தெரியாமல் வாகனத்தை பின்னுக்குத் தள்ளினார். பின்னர் அந்த காரின் சக்கரம் அவர் மீது ஏறி நின்றது.
பின்னர், அந்த நபர் தொடர்ந்து கத்தியதால், சத்தம் கேட்டு மக்கள் SUVயை நோக்கி ஓடி வந்து காருக்கு அடியில் இருந்த முதியவரை மீட்டனர். அதை தொடர்ந்து ஓட்டுநரும் கீழே இறங்கினார். அதிக எடையுள்ள SUVயால் அந்த நபருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அடிப்பட்ட முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கு ஆபத்து மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sensitive Video?
— Voice of Assam (@VoiceOfAxom) May 24, 2024
Shocking Incident in Jhansi | SUV Mows Down Man Twice, Disturbing CCTV Footage Emerges.
FIR Lodged, Manhunt Is On For The Driver. #ViralVideo #Jhansi #SUV pic.twitter.com/efCd3Q8HOJ
- ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகே உள்ள அம்ரோரா கிராமத்திற்கு அருகே, சரஸ்வதி ராம் என்ற அந்த 60 வயது முதியவர் நேற்று முன்தினம் தனது கால்நடைகளை வண்டியில் ஏற்றி அருகில் உள்ள பன்ஷிதர் நகர் என்ற சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர்ம், முதியவரை மறித்து, மாடு கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரது ஆடைகளைக் களைந்து இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று சிறிதுதூரத்தில் கட்டை அவிழ்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மூவரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
- உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
- முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.
இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடலூர்:
சிதம்பரம் கொத்த ட்டையில் வசிப்பவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட்ராவ் (வயது 65). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் போர்மேனாக பணி செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பணி செய்து வந்தார்.இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கட்ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார்.
- இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார். இதை கண்ட பயணிகள் ஏதோ மது அருந்திவிட்டு தூங்குவதாக நினைத்தனர். இதனால் பஸ் நிறுத்த இருக்கையில் அமர்வதற்கு கூட அஞ்சினர். இந்த நிலையில் திடீரென ஒரு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் மனிதாபிமானத்துடன் அந்த பெரியவர் மீது பரிவு காட்டினார். இதையடுத்து அந்த பெண் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார். அந்த பெரியவரால் எழுந்து, அமர்ந்து உட்கார முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாக கிடப்பதால் அந்தப் பெண் அந்த பெரியவர் கையில் கொடுத்தார். அதை அவர் படுத்த நிலையிலேயே சிறிது சிறிதாக இட்லியை சாப்பிட தொடங்கினார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள பயணிகள் கண்டு மெய் சிலிர்த்தனர். பொதுவாக யாராவது அனாதையாக சாலையோரம் கிடந்தால் அவரை யாரும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் இந்த பெண் நடந்து கொண்ட விதம் மனிதாபிமானத்தை உண்டாக்கியது. தற்போது இந்த பெரியவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. சமூக அறக்கட்டளை நிர்வாகத்தினர் உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 59).
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
தஞ்சை மூலிகைப் பண்ணை ரோட்டில் வந்த போது சாலை யில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.
மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
இதில் கட்டு ப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
- அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் காசி ராமன் தெருவை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 57). இவர் கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவதன்று இவர் வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.
பின்னர் பூம்புகார்- கல்லணை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். கல்யாணபுரம் மெயின் ரோட்டில் வந்தபோது ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்த சொல்லி கீழே இறங்கி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோ அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தொப்பையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
- இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்ற முதியவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அருகில் வசிக்கும் முருகேசன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து முருகேசனை (52) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்