என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Omshakti Shekhar"
- அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல் முறையாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அங்கு நிருபர்கள் சந்திப்பு நடத்தியது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
- நான் எந்தக் கட்சிக்கு சென்றாலும் என்னை வரவேற்க அந்த கட்சியினர் காத்திருக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல் முறையாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அங்கு நிருபர்கள் சந்திப்பு நடத்தியது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
என்னை நம்பி உள்ள கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் எப்போதும் எந்த பிரச்சினை யிலும் மாட்டி விட மாட்டேன். நானே எதுவாக இருந்தாலும் எதிர்கொள் வேன். நான் எப்போதும் யாரையும் அரசியல்ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்வேன், தொழில் ரீதியாக விமர்சனம் செய்வது நல்லதல்ல. நான் ஏதோ ஒரு கட்சியில் பேசி வருவதாக தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் எந்தக் கட்சிக்கு சென்றாலும் என்னை வரவேற்க அந்த கட்சியினர் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால் புதுச்சேரி பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
- சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள்
எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து பொதுமக்கள் வாங்க முடியாத விலைக்கு சென்றுள்ளது. தக்காளி அதிகம் விளையும் மாநி லங்களில் பெய்த மழையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.20-க்கு விற்ற தக்காளி இப்போது ரூ.125-க்கு விற்கும் நிலை உள்ளது.
மற்ற காய்கறிகளும் தற்போது விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால் புதுச்சேரி பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அண்டை மாநிலங்களில் தக்காளி மற்றும் காய்கறி விலை கட்டுப்படுத்த உழவர் சந்தைகள் மூலமாக காய்கறி கள் அதிக அளவில் விற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்படுகின்றன.
மற்ற இடங்களில் பூட்டி கிடக்கிறது. புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளும் திறக்கப்படாமல் உள்ளன.
இவற்றை அரசு திறக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
புதுவை அரசு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
- இந்த ஆண்டு பருவ தேர்வுகள் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை பல்கலை கழக உறுப்பு கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக் கால்,மாகி, ஏனம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பருவ தேர்வு மே மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, ஜூன் மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கபடுவது வழக்கம். இந்த ஆண்டு பருவ தேர்வுகள் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.
பல்கலைக்கழகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இறுதி ஆண்டு பருவ தேர்வு முடித்து, கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாக நேர்காணலில் திறமை மிக்க மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு விட்டன.
தேர்வுகள் நடத்தப் படாமல் உள்ளதால் மாணவர்கள் பணியில் சேர முடியாமல் வேலை வாய்ப்பை இழக்கும் சூழலை புதுவை பல்கலைக்கழக நிர்வாகம் உருவாக்கி உள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல் படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழக நிர்வாகம் மிக துரிதமாக செயல்பட்டு காலதாமதம் செய்யாமல் உடனடியாக தேர்வுகளை நடத்த வேண்டும். முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாராயணசாமி மீது ஓம்சக்தி சேகர் சாடல்
- இந்தியாவில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும் பொறுப்பேற்று நாராயணசாமி அரசியலில் இருந்தே விலகுவாரா?
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து ஏற்பட்ட மரணத்திற்கு புதுவை முதல்-அமைச்சர் பதவி விலக சொல்வது இந்த ஆண்டின் மிக பெரிய காமெடி என மக்கள் பரவலாக பேசி வருகின்றனர். எங்கே தமிழக தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் கூட்டணி உடைந்து அதற்கு நாம் காரணமாகி விடுவோமா என்ற பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் போகிற போக்கில் பேசி வருகிறார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய மந்திரி, மாநில முதல்-அமைச்சர் என மிக பெரிய பொறுப்பான நிலைகளில் இருந்து விட்டு இப்போது நிலை தவறி பேசுவது ஒரு முன்னாள் முதல்- அமைச்சருக்கு அழகல்ல.
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்தவுடன் முதல் -அமைச்சர் ரங்கசாமி பதவி விலக நாராயணசாமி கேட்டார். அவர் மத்திய மந்திரி பதவியில் இருந்த போது தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வு பயம் காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும் பொறுப்பேற்று நாராயணசாமி அரசியலில் இருந்தே விலகுவாரா?
தான் ஆட்சியில் இருந்த போது எப்போதும் கவர்னரிடம் போராட்டம் செய்தே காலத்தை கழித்து வாக்களித்த மக்களுக்கு எந்த நலனையும் செய்யாமல் இருந்து விட்டு இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்யும் நற்பணிகளை பொறுத்து கொள்ள முடியாத நாராயணசாமி தேவையின்றி பேசுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் குயவர்பாளையம் லெனின்வீதியில் உள்ள ஓம்சக்திசேகர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- வேல்முருகன்,குப்புசாமி உடையார், கண்ணையன், முனியன், கணேசன், அருள், சேகர், ஜெய்,தேவா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் குயவர்பாளையம் லெனின்வீதியில் உள்ள ஓம்சக்திசேகர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரி, இளநீர் உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை உணவுகளை வழங்கி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மாசிலா குப்புசாமி, மகேஸ்வரி, விஜயலட்சுமி, கோவிந்தம்மாள், செல்வராஜ், சதாசிவம், சங்கர் உடையார், முருகன், வெரோனிகா, லட்சுமணன்,புகழ் பாரி,தம்பா, இருசப்பன், சேகர்,ஆர்.வி.ஆர். வெங்கடேசன், அப்பாவு, நாக.லோகநாதன், சுப்பிரமணியன்,
அய்யப்பன்,சுந்தர மூர்த்தி, பாலசுப்ரமணியன், எம் .ஆர். கே கலியபெருமாள், இளம்வ ழுதி, நாகராஜ்,திருபுவனை கலியபெருமாள், குணசேகர், ஞானப் பூங்கோதை, கணபதி, மாயகிருஷ்ணன்,தங்கராசு,
மோகன்தாஸ், சித்தா கணேசன், இளவரசு, வேல்முருகன்,குப்புசாமி உடையார், கண்ணையன், முனியன், கணேசன், அருள், சேகர், ஜெய்,தேவா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மருத்துவ முகாமினை ஓம்சக்தி சேகர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார்.
- மகப்பேறு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், ஆகியவற்றுக்கு இலவசமாக பரிசோதனை நடைபெற்றது.
புதுச்சேரி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி புதுவை குயவர் பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள கீர்த்தி மகால் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமினை ஓம்சக்தி சேகர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார்.
முகாமில் பொது மருத்துவம், காது,மூக்கு, தொண்டை,கண் சிகிச்சை,குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், ஆகியவற்றுக்கு இலவசமாக பரிசோதனை நடைபெற்றது.
பொதுமக்கள் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அனை வருக்கும் மருந்து,மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி, முருகதாஸ், மகேஸ்வரி, விஜயலட்சுமி, கோவிந்தம்மாள், மலை செல்வராஜ், சதாசிவம், சங்கர் உடையார்,முதலியார் பேட்டை பிர காஷ்,இருசப்பன், வெரோனிகா, முருகன், புகழ்பாரி, ராதாகிருஷ்ணன், சேகர், பாஸ்கர், வெங்கடேசன், அப்பாவு, நாக லோகநாதன், கலியபெருமாள், ஏம்பலம் கோவிந்தராஜ், காட்டுக்குப்பம் நடராஜன், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- ஒரு கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், பெற்ற பதவியை கொண்டு பொதுமக்களுக்கும் தனது தொகுதி மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை அரசிடமும், அரசு அதிகாரி களிடமும் போராடி, வாதாடி நியாயமான முறையிலே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். இதை விடுத்து மிரட்டல் விடுப்பது, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்து வது போன்று பேசுவது போன்ற செயல்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளின் மாண்புக்கு நல்லதல்ல.
முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. தேவையில்லாத கருத்துக்களை கூறுவதும் ஒரு மாநிலத்தில் 4 முறை முதல் -அமைச்சராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
எனவே ஏனாம் சுயேட்சை எம்.எல்ஏ. தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும். முதல்-
அ மைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு ஆவதால் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்கள் இது போன்ற தேர்வுகளுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக ஏற்கனவே கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 1-ந் தேதி புதுவை விடுதலை தினத்தன்று மேலும் பல்வேறு அரசு பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்காக படித்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர். வாய்ப்பு உள்ளவர்கள் இதற்காக பயிற்சி மையங்களை அணுகி பல்வேறு வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.
இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு ஆவதால் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்கள் இது போன்ற தேர்வுகளுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர். மேலும் நீண்ட நாட்களாக கனவாக இருந்த அரசு வேலை வாய்ப்பு என்பது கனவாகி போய் விடுமோ என்ற எண்ணமும் இவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனவே முதல்- அமைச்சர் அரசின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலன் கருதி அரசின் சார்பில் இலவச பயிற்சி மையங்களை அமைத்து தர வேண்டும். மேலும் அரசு ஊழியர்களும் எழை-எளியோருக்கு பயிற்சி தர தகுதியானவர்கள் ஆவார்கள். அவர்களைக் கொண்டும் பயிற்சி வகுப்பில் எடுக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசின் எண்ணம் முழுமையான அளவில் நிறைவேறும்.
இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.
- கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் சிலர் எதிர்கட்சிகளை தூண்டிவிட்டு அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக பேச வைப்பார்கள். பின்னர் அதற்கு பதில் சொல்வது போல பேசி பெயரெடுப்பார்கள்.
- ஓ.பி.எஸ். தலைமையை நாளை எடப்பாடி ஏற்றால் தற்போது விமர்சிப்பவர்கள் நிலை என்னவாகும்?
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் சிலர் எதிர்கட்சிகளை தூண்டிவிட்டு அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக பேச வைப்பார்கள். பின்னர் அதற்கு பதில் சொல்வது போல பேசி பெயரெடுப்பார்கள். அதுபோல இப்போது புதுவை அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை கொச்சைப்படுத்தும் வகையில் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பேசி வருகின்றனர்.
நான் எடப்பாடியை தவறாக விமர்சிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஜெயலலிதாவின் உண்மை தொண்டன் என போற்றப்பட்டவர் ஒ.பி.எஸ். ஜெயலலிதா இருந்த போதும், மறைந்த பிறகும் ஓ.பி.எஸ். போன்ற தொண்டரை அ.தி.மு.க. கண்டதில்லை. அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதை ஒருகாலும் ஏற்க முடியாது.
ஓ.பி.எஸ். தலைமையை நாளை எடப்பாடி ஏற்றால் தற்போது விமர்சிப்பவர்கள் நிலை என்னவாகும்? எடப்பாடியே ஓ.பி.எஸ்சை ஏற்றாலும் நான் ஏற்க மாட்டேன் என அவர்களால் கூற முடியுமா?
கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 3 பேர் வெற்றி பெற்றோம்.
முதல்-அமைச்சராக காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி பதவியேற்ற போது அமைச்சர் பதவிக்காக என்னை காங்கிரசில் சேர அன்பழகன் வற்புறுத்தினார். அப்போது நான் மறுத்துவிட்டதால் அன்பழகன் காங்கி ரசில் இணைவது தவிர்க்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக கிரண்பேடியை அன்பழகன் எதிர்த்து வந்தார். தற்போது ரங்கசாமிக்கு ஆதரவாக தற்போதைய கவர்னரை புகழ்ந்து வருகிறார். ஓ.பி.எஸ்.சிடம் அன்பழகனை போல பலன் பெற்றவர்கள் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்