search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OnePlus 7"

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக், டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ஒன்பிளஸ் 7 சிறப்பம்சங்கள்:

    - 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
    - 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 9.5
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″, 0.8μm, OIS, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12 µm, f/2.4
    - 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி சென்சார், f/2.0, 1.0μm
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்.-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மிரர் கிரே மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.32,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரெட் மாடல் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் மாதத்தில் துவங்கும் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 7 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #OnePlus7



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் லண்டனில் மே மாதம் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    வெளியீட்டு தேதியுடன் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் ஒன்றையும் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வளைந்த வடிவமைப்பு, மூன்று பிரைமரி கேமரா மற்றும் அலெர்ட் ஸ்லைடர் உள்ளிட்டவை வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.



    ஒன்பிளஸ் 7 ப்ரோ / 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் 3120x2232 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

    புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6 OIS, 8 எம்.பி. 3X சூம், 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ராப் சார்ஜ் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    ஒன்பிளஸ் 7 மாடலில் 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, 3700 ம்.ஏ.ஹெச். பேட்டரி, 20 வாட் டேஷ் சார்ஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 7 புதிய டீசர் வீடியோவை கீழே காணலாம்..,

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதில் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #OnePlus7



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் 360-டிகிரி வீடியோ லீக் ஆகியுள்ளது. ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் 7 நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் மூன்று: பிளாக், பர்ப்பிள் மற்றும் கிரே நிறங்களில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் சரியாக அறியப்படவில்லை என்றாலும், இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவதால் ஆல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இத்துடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படும் என்றும், புகைப்படங்களை எடுக்க 40 எம்.பி. + 20 எம்.பி. மற்றும் 5 எம்.பி. என மூன்று வித கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    மெமரியை பொருத்தவரை ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போனினை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்படலாம். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய டி.வி. மற்றும் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #OnePlus7 #OnePlusTV



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை மே முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள ஒன்பிளஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்விழாவில் ஒன்பிளஸ் புதிய டி.வி.யை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் டி.வி.யில் 4K டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் ஏ.ஐ. அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய டி.வி. பற்றி ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஏற்கனவே தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    ஒன்பிளஸ் டி.வி. தவிர ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    இதே பிராசஸர் லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்களின் கேமரா எதிர்பார்த்த அளவு சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு பெருமளவு எழுந்திருந்ததால், புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் அதிகளவு மேம்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    அந்தவகையில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் சோனியின் 48 எம்.பி. IMX 586 சென்சார் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுவது வாடிக்கையாகி இருப்பதால், புதிய ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் இதேபோன்ற கேமரா வழங்கலாம்.
    2019-ம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட ஒன்பிளஸ் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவன சிஇஓ தெரிவித்திருக்கிறார்.




    ஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஷாங்காய் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

    அதன்படி அமெரிக்க டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து அடுத்த ஆண்டு வாக்கில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 அல்லது 7T ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு அமெரிக்காவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் முதல் ஆண்டாக அமைய இருக்கிறது. தற்சமயம் ஒன்பிளஸ் நிறுவனம் மே அல்லது ஜூன் மாத வாக்கில் வழக்கமான வேரியன்ட் ஒன்றையும், நவம்பர் மாத வாக்கில் T-வேரியன்ட் மாடலை வெளியிட்டு வருகிறது. 


    கோப்பு படம்

    நெட்வொர்க் சப்போர்ட் முறை ஒன்பிளஸ் நிறுவனத்து சாதகமாக இருக்கும், இதனால் அமெரிக்க பயனர்களுக்கு வாங்கும் முன் பயன்படுத்த அதிக நேரம் வழங்கும். சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் ஐரோப்பிய நெட்வொர்க் வசதியுடன் வழங்க துவங்கியுள்ளது. 

    முதல் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், எந்த நெட்வொர்க் உடன் இணைய இருக்கிறது என்பது குறித்த எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் ஏடி&டி மற்றும் டி மொபைல் நெட்வொர்க்களில் வழங்கப்படுகிறது. 

    எனினும் குவால்காம் சிப்செட்களை கொண்டு எவ்வித அமெரிக்க நெட்வொர்க்களுடன் இயங்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட முடியும். ஸ்மார்ட்போனின் வேகம் குறித்த கேள்விக்கு, “ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சாராம்சமாக சீராக இயங்கும் அதிவேக அனுபவம் வழங்குவது தான்” என பீட் லௌ தெரிவித்தார்.
    ×