search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Security"

    சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான பாஸ்வேர்டு கண்டறியப்பட்டுள்ளது. #CyberSecurity



    லண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் (NCSC) நடத்திய சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான ஒற்றை பாஸ்வேர்டு “123456” தான் என கண்டறியப்பட்டுள்ளது.

    பொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்திய NCSC பொது மக்கள் அதிகம் பயன்படுத்திய எழுத்துக்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றை பார்த்தனர். இதில் “123456" என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். 

    இதற்கு அடுத்த இடத்தில் “123456789” இருந்தது. இவைதவிர “qwerty”, “password” மற்றும் “1111111” உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளின் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. 



    இவற்றுடன் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்டவையும், கால்பந்து அணிகளின் பெயர்களான லிவர்பூல், செல்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. பொதுவான பாலஸ்வேர்டுகளை சூட்டுபவர்களில் பலர் ப்ளின்க் 182 (Blink-182) என்ற பாஸ்வேர்டையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

    பாஸ்வேர்டுகளில் பிரபல பெயர்கள் அல்லது எழுத்துக்களை பயன்படுத்துவோர் மிக எளிதில் ஹேக்கர் வசம் சிக்கிவிட முடியும் என NCSC தொழில்நுட்ப இயக்குனர் இயான் லெவி தெரிவித்தார். முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாக்க நினைப்போர் எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
    ×