search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Only Deepak escaped alive"

    • ராணிப்பேட்டை கோர்ட் தீர்ப்பு
    • உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை தனது பாட்டி, ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தான்

    ராணிப்பேட்டை :

    அரக்கோணம் தாலுகா, தக்கோலம் அடுத்த கணபதிபுரம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(40) முடிதிருத்தும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் காஞ்சிபுரம் அடுத்த போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதா(34) என்பவருக்கும் திருமணமாகி தீபக்(7) ரூபன்(3.1/2) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இந்நிலையில் முனியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்நதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதனால் தீபக், ரூபன் ஆகிய இரண்டு பேரும் முனியப்பனுடைய தாய் மற்றும் தங்கையிடம் வளர்ந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 29.06.2018 அன்று காஞ்சிபுரம் சென்ற முனியப்பன் தனது மனைவி ராதாவை தன்னுடன் வாழ அழைத்துள்ளார் .

    அதற்கு ராதா வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் மறுநாள் 30ம் தேதி அன்று கணபதிபுரத்திற்கு வந்து தனது மகன்களிடம் உங்கள் தாய் என்னுடன் வாழ வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    பின்னர் தனது இரு மகன்களையும் கிணற்றிற்கு அழைத்து சென்று இளைய மகன் ரூபனை கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் தீபக்கையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சிறுவன் ரூபன் நீரில் மூழ்கி இறந்து விட்டான் .

    தீபக் மட்டும் உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை தனது பாட்டி, அத்தை மற்றும் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தான்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், முனியப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து முனியப்பன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×