என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening ceremony"

    • புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் பரமக்குடி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • அ.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் ஒன்றியம் அரியகுடி புத்தூரில் ரூ.6.87 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நெல் கொள்முதல் நிலையத்தை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் திறந்து வைத்தார்.

    அதேபோல் அரியகுடி புத்தூரில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை தாங்கி 30 பேருக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு துணை தலைவர் பூமிநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோ மற்றும் அரியகுடி புத்தூர் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தேவிபட்டணம் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
    • வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார், தேவிபட்டணம் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கிளை செயலாளர் முருகன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ராமர், உள்ளார் மணிகண்டன், விக்கி, அங்கன்வாடி பணியாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார். ேக.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்கிறார். 
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீதிக்காடு பாலாமணி செல்வராஜ் செய்துள்ளார்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளி கும்மியாட்ட குழுவின் சார்பில்‌ கும்மியாட்ட பயிற்சி தொடக்க விழா பெருமாநல்லூர் வீதிக்காடு விநாயகர் கோவிலில் இன்று மாலை தொடங்குகிறது. விழாவிற்கு ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார். ேக.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்கிறார். 

    இப்பயிற்சியானது இன்று முதல் தொடர்ந்து 30 நாட்கள் மாலை 7 மணி முதல்இரவு 9 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியானது பெண்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகும். பயிற்சியில் ஆர்வம் உள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான பயிற்சியை திருப்பூர் நாடகம் மற்றும் நாட்டுப்புற நல சங்க தலைவர் பூளவாடி எம். ராமசாமி மற்றும் ஆசிரியர் விருது பெற்ற ராசு ஆகியோர் வழங்குகிறார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீதிக்காடு பாலாமணி செல்வராஜ் செய்துள்ளார். 

    • ராஜபாளையத்தில் கலைதிருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகு தியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் கலைத்திருவிழா நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தலைமையில் நடந்தது. இதில் தனுஷ்எம்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், வட்டார அளவிலுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பின் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் வெற்றி பெறும் 200 மாணவ- மாணவிகளை வெளி நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல தமிழக முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். இந்தியாவிலே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது தமிழக முதல்வர் தான் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தேனியில் மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
    • வாடிக்கையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினர்.

    மதுரை

    தேனியில் மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.

    மதுரையில் 1990-ல் முதல் கிளையை ஆரம்பித்த ஸ்ரீகிருஷ்ணா தங்க மாளிகை அயராத உழைப்பின் மூலம் தரமான தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை புதுப்புது கலெக்சன்களை வழங்கிவந்த நிலையில் வாடிக்கையாளர்களின் ஆதரவினாலும், தேனியில் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறந்து வைக்கப்பட்டது.

    தேனி-மதுரை ரோட்டில் பிரமாண்ட ஷோரூமை நிர்வாக இயக்குனர்கள் செல்வம், ஜெகதீசன், மணிவாசகம், சங்கர் ஆகியோர் முன்னிலையில் தேனி ஏ.எம்.ஆர்.ஆர். குழுமத்தலைவர்-தொழிலதிபர் சந்திரகுமார் திறந்து வைத்தார். அகிலாகுமார் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    திறப்பு விழா சலுகையாக தங்கம் பவுனுக்கு ரூ. 400 தள்ளுபடியாகவும், வைரம் கேரட்டிற்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடியாகவும், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இலவசமாகவும், திறப்பு விழாவிற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள் பாலாஜி, நந்தகிருஷ்ணன், ஸ்ரீராம், கோகுல்நாத் ஆகியோர் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினர்.

    • காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு-லேசர் சிகிச்சை மையங்கள் திறப்பு விழா நடந்தது.
    • தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக காரைக்குடி கே.எம்.சி. மருத்துவமனையில் தொடர்ச்சியான அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை சி.ஆர்.ஆர்.டி மற்றும் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இந்த தொடர்ச்சியான சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை முக்கியமாக கடுமையான சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த செயல்முறை மாற்றாக ஹீமோடியா பில்ட்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு 12 முதல் 24 மணி நேரம் நீடிக்கும்.தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.

    சிவகங்கை மாவட்டத்தில் முதன் முறையாக கே.எம்.சி.மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் சிகிச்சை முறையில் மருத்துவம் செய்யும் துறையும் தொடங்கப்பட்டுள்ளது.வெரிகோஸ் வெயின் உலகளவில் வயது வந்தோரில் 23 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. வெரிகோஸ் வெயின் பொதுவாக கால்களை பாதிக்கிறது.

    நீண்டநேரம் நின்று கொண்டிருப்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கால்கள் இந்த நோயால் பாதிப்பு ஏற்படும். கே.எம்.சி.மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் சிகிச்சைகளை வழங்குகி றார்கள். வெரிகோஸ் வெயினை குணப்படுத்துவதற்கு தொந்தரவில்லாத அனுபவத்தையும், சிறந்த வகையில் லேசர் அறுவை சிகிச்சையையும் வழங்க கே.எம்.சி. குழு தயாராக இருக்கிறது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு உயர்தர சிகிச்சையை காரைக்குடி பகுதியில் வழங்க முடியும் என்று கே.எம்.சி. மருத்துவமனை தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கே.எம்.சி மருத்துவமனை தலைமை மருத்துவர் சலீம் ஆர்த்தோ மற்றும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • கொடியேற்றும் நிகழ்ச்சி நகர சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே மெலட்டூர் நகர வணிகர் நல சங்க அலுவலக திறப்பு மற்றும்கொடியேற்றும் நிகழ்ச்சி நகர சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க ஆலோசகர் வழக்கறிஞர் நேதாஜி, துணைத் தலைவர்கள்துரைராஜ், உதயகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமாகிய ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மெலட்டூர் கடை வீதியில் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து சங்க அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். மேலும் மெலட்டூர் நகர சங்க வியாபாரிகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் சுப்பு, சோழா, தெற்கு மாவட்டசெயலாளர் சத்தியநாராயணன், மகேந்திரன், கோவிந்தராஜ், பாபநாசம் தொகுதி தலைவர் ஜெயராமன், மற்றும் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்களும் மெலட்டூர் நகர செயலாளர் பாலாஜி, துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வணிகர்கள் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மெலட்டூர் நகர நிர்வாகி மணிமாறன் நன்றி கூறினார்.

    • நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், முருகன் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
    • போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்ததன் காரணமாகவே அந்த பழைய நிழற்குடை இடிக்கப்பட்டு வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், முருகன் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    அதனை சரி செய்வதற்கான தீர்வாக வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது.

    தொடர்ந்து வண்ணார் பேட்டையில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் முன்பு அமைக்கப்பட்டு இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் சமீபத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினரின் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றது. அதற்கான பணிகள் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்ததன் காரணமாகவே அந்த பழைய நிழற்குடை இடிக்கப்பட்டு வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது என்று மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று அந்த நிழற்குடையை திடீரென இடித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பஸ் நிலையத்திற்கு மாநகராட்சி சார்பில் எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தற்போது எதற்காக அந்த கட்டிடம் இடிக்கப்படுகிறது என்பதும் மாநகராட்சி நிர்வாகத்தில் யாருக்கும் தெரியாது என்று கை விரித்து விட்டனர்.

    அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்த அந்த நிழற்குடை திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே அகற்றப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • கீழக் கடையம் பகுதியில் புதிய வாருகாலுடன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
    • திறப்பு விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலக தெருப்பகுதியில் 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ .16 லட்சம் மதிப்பில் புதிய வாருகாலுடன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் முன்னிலை வகித்தார். கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் கடையம் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக டி.கே. பாண்டியன், முகமது உசேன், அழகுதுரை, முருகன், முத்துலட்சுமி ராமதுரை, மாரியப்பன், மாரிசுப்பு, கணேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயம் நன்றி கூறினார்.

    • அதிகாலையே பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
    • அதிகாலையே பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கோவையில் காரமடை அரங்கநாதர் கோவில், பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், ஜெகநாத பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்தார். சுவாமியை தொடர்ந்து பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது கடந்த 23-ந் தேதி காலை காலை திருமொழி திருநாள் தொடக்கம் என்னும் பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று இரவு எம்பெருமான் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் அதாவது (பெண் வேடம் தரித்து) மோகனாவதாரம் பூண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.40 மணியளவில் அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக வந்தார்.

    அப்போது சங்கு, சேகண்டி முழங்க, பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    பின்னர் சுவாமி கோவிலின் நான்கு ரத வீதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 30 சமூக பந்தல்களில் நின்று அச்சமுதாய மக்களின் சிறப்பு பூஜைக்கு பின் மீண்டும் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இன்று இரவு ராப்பத்து உற்சவமானது ெதாடங்குகிறது. அதனை தொடர்ந்து 8 நாட்களும் ராஜ அலங்காரம்,வாமன அவதாரம்,நரசிம்மர் அவதாரம், ராமாவதாரம், பலராமர் அவதாரம், வெண்தாணை ழி கிருஷ்ணன், தவழ் கிருஷ்ணன், குதிரை வாகன உற்சவம் உள்ளிட்ட 8 அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அரங்கநாதர் காட்சியளிக்க உள்ளார்.

    பக்தர்களின் பாது காப்பிற்காக காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காரமடை நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விழா ஏற்பாடுகளை காரமடை அரங்கநாதர் திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையிலான அலுவலர்கள் செய்தி ருந்தனர். 

    • பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    பல்லடம்:

    பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட குழு துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனியன் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரிகள் அண்ணாதுரை, பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் பேசுகையில், தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் நீங்களும் இணைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்கண்ணா கல்லூரி இன்று பசுமையாய் காட்சியளிப்பதற்கு முழு காரணம் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களே. நாட்டு நலப் பணித்திட்டத்தில் இணைந்த நீங்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து, சமுதாயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    • காரைக்குடியில் சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா நாளை நடக்கிறது
    • முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் நருவிழி அம்பாள் மாடர்ன் ரைஸ்மில் உரிமை யாளரும், வித்யாகிரி கல்வி குழும தலைவருமான தொழில் அதிபர் லயன்கிருஷ்ணன் குடும்பத்தினரின் புதிய நிறுவனமான ''சூரியா ஜூவல்லரி மார்ட்'' காரைக்குடியில்

    நாளை (26-ந்தேதி) திறக்கப்படுகிறது.

    காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள நருவிழி காம்ப்ளக்சில் நாளை திறப்பு விழா நடக்கிறது. இங்கு தங்கம், வைரம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப் படுகிறது.

    தங்க நகை பிரிவை தொழில்அதிபர் படிக்காசும், வைரம் மற்றும் வெள்ளி விற்பனை பிரிவை சிங்கப்பூர் தொழில்அதிபர் செல்லப்பனும் திறந்து வைக்கிறார்கள். முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

    இதில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார தொழில்அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை லயன்.கிருஷ்ணன் மற்றும் லயன் அருணகிரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    ×