search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "outlying land"

    • நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • சட்ட விதிமுறைகளை பின்பற்றி அவகாசம் அளிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.கோர்ட்டு உத்தரவுப்படி கணக்கெடுப்பு நடத்தியதில் மாவட்டத்தில் உள்ள,9 தாலுகாவில் 60 எக்டர் பரப்பிலான நீர்நிலை மற்றும் நீரோடை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

    நகர உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அதில் ஆக்கிரமிப்பு வீடுகள், ஆக்கிரமிப்பு நிலம் ஆகியவற்றை மீட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன.

    கலெக்டர்வினீத் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலம், வீடு வாரியாக கணக்கிடப்படவில்லை. வருவாய்த்துறையில் பரப்பளவு மட்டும் கணக்கிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 60 எக்டர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.கடந்த இரண்டு மாதங்களில் 35 எக்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளை பின்பற்றி அவகாசம் அளிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது என்றார்.

    ×