search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paari Vendhar"

    சென்னையில் பாரிவேந்தர் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, எத்தனை வயது வந்தாலும் எவரும் கவிஞராகிவிட முடியாது என்றார். #PaariVendhar #Vairamuthu
    சென்னை:

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பாரி வேந்தர் எழுதிய கவிதை வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. பாரிவேந்தர் கவிதைகள் என்ற நூல் வெளியீட்டு விழாவில், கவிஞர் வைரமுத்து, கவிஞர் சிலம்பொலி செல்லப்பன், குமரி அனந்தன், மூத்த வழக்கறிஞர் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாளவன், ஞானசம்பந்தன், பொன்வண்ணன், சைதை துரைசாமி, கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கவிஞர் வைரமுத்து கவிதை நூலை வெளியிட, கவிஞர் சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசுகையில்,

    40 வயதில் ஒருவர் தொழிலதிபராகி விடலாம், 50 வயதில் ஒருவர் அமைச்சராகி விடலாம், 60 வயதில் ஒருவர் பெரிய தலைவராகி விடலாம். 70 வயதில் ஒருவர் முதலமைச்சராகி விடலாம், 90 வயது வந்தாலும் எவரும் கவிஞராகிவிட முடியாது. அது உள்ளிருக்கும் ஒரு நெருப்பு, ஒரு சுடர், தானாக வர வேண்டும். அவர் இன்று நேற்று கவிஞரானவர் அல்ல, குன்றக்குடி அடிகளாரின் தலைமையில், கல்லூரி நாட்களில் என்சீர்விருத்தம் படித்தவர் பாரிவேந்தர் என்பதை இந்த மன்றம் மறந்துவிடக் கூடாது.

    இவ்வாறு பேசினார்.

    அம்மா பற்றிய கவிதையை பற்றி அனைவரும் பாராட்டிய நிலையில், பாரி வேந்தர் பேசும் போது, என் தாய் பற்றி சொல்லும் போது, அந்த கவிதையை ஒருமுறை முழுமையாக படித்தால் நிச்சமாக அழுதுவிடுவேன் என்றார். #PaariVendhar #Vairamuthu

    ×