search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paaytm"

    பேடிஎம் மால் தளத்தில் ஜியோபோன் வாங்குவோருக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jiophone #paytm



    பேடிஎம் மால் தளத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் வாங்குவோருக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் தள்ளுபடி தொகை கேஷ்பேக் வடிவில் வழங்கப்படுகிறது. பேடிஎம் மால் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் பெற Monsoon500 எனும் கூப்பன் கோடினை பதிவு செய்து பெறலாம்.

    கேஷ்பேக் சலுகை பேடிஎம் தளத்தின் மான்சூன் லாயல்டி கேஷ்பேக் மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜியோபோனை ரூ.1,099-க்கு பெற முடியும். பேடிஎம் சலுகைக்கும் ஜியோ சமீபத்தில் அறிவித்த மான்சூன் ஹங்காமா சலுகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

    ரிலையன்ஸ் ஜியோபோன் பயனர்களுக்கு மான்சூன் ஹங்காமா சலுகை ஜூலை 21-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்தார்.



    இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ஜியோபோனை ரூ.501 விலையில் பெற முடியும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி பயனர்கள் ஜூலை 21-ம் தேதி முதல் தங்களது ஃபீச்சர்போனை எக்சேஞ்ச் செய்து ஜியோபோனை ரூ.501-க்கு பெற முடியும்.

    எனினும், ரூ.501 எக்சேஞ்ச் சலுகையில், ஜியோபோன் இலவசமாக பெற முடியாது. மான்சூன் ஹங்காமா சலுகையில் ஜியோபோன் வாங்கும் போது நீங்கள் செலுத்தும் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஜியோபோனை இலவசமாக வாங்க ரூ.1500 செலுத்த வேண்டும், இதற்கு எக்சேஞ்ச் சலுகை பொருந்தாது.



    ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA 240x320 பிக்சல் டிஸ்ப்ளே
    - 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் சிப்செட்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    ஜியோபோனில் ஜியோ அசிஸ்டண்ட் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஜியோபோனினை குரல் மூலமாகவே இயக்க முடியும். இத்துடன் புதிய அப்டேட் மூலம் ஜியோபோனில் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #jiophone #paytm
    ×