search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pachadi"

    பைனாப்பிள், தயிர் சேர்த்து அருமையான சத்தான ரெய்தா செய்யலாம். இதை சாலட் போன்றும் சாப்பிடலாம். இந்த ரெய்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பைனாப்பிள் - 1 துண்டு.
    தயிர் - 1 கப்,
    உப்பு - ஒரு சிட்டிகை,
    சீரகத்தூள் - 1 சிட்டிகை.



    செய்முறை :

    பைனாப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும்.

    இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப் பொடியையும் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

    அதை சாலட் போன்றும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரெய்தா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெய்தாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 100 கிராம்,
    பச்சை மிளகாய் - 2,
    வெங்காயம் - 1,
    புளிக்காத தயிர் -1 கப்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - அலங்கரிக்க.

    தாளிக்க :

    கடுகு,
    உளுந்து,
    கறிவேப்பிலை,
    பெருங்காயம்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிருடன் உப்பு கலந்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, நன்றாக கிளறவும்.

    இந்த கலவையை தயிருடன் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், சாதம், பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையான கீரைத்தண்டு பச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கீரைத் தண்டு - ஒருகட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    தக்காளி - 1
    கறிவேப்பிலை - கொஞ்சம்
    கொத்தமல்லி - ஒரு பிடி
    புளிப்பில்லாத தயிர் - 2 கப்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரைத் தண்டை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்து கீரை தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடித்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தயிர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.

    எண்ணெய் காய வைத்து சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து இதில் கொட்டவும்.

    இந்த பச்சடி சப்பாத்தி அசைவ உணவுகளுக்கு நன்றாக இருக்கும். இதில் தேவையெனில் கேரட்டைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×