என் மலர்
நீங்கள் தேடியது "Paddy"
- பனிப்பொழிவு இருப்பதால், காய வைத்தாலும் நெல்லில் ஈரப்பதம் குறைவதில்லை.
- 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
தஞ்சாவூா்:
டெல்டா மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பெய்த பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கரில் நெல், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிா்கள் பாதிக்கப்பட்டன.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிா்கள் சாய்ந்துவிட்டதாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களில் ஈரப்பதம் அதிகமாகிவிட்ட தாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
இதுதொடா்பாக மத்திய அரசுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, இந்திய உணவு கழகத்தின் தரக்கட்டு ப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அலுவலா்கள் பிரபாகரன் தலைமையில் தொழில்நுட்ப அலுவலா்கள் யூனுஸ், போயா ஆகியோா் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று மாலை ஆய்வு செய்தனா்.
முதலில் தஞ்சாவூா் மாரியம்மன்கோவில் அருகேயுள்ள அருள்மொழி ப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் குவிய ல்களில் நெல் மணிகளை அள்ளி, எந்த அளவுக்கு ஈரப்பதம் இருக்கிறது என்பதைப் பாா்த்தனா்.
மேலும், ஈரப்பதம் கணக்கிடும் கருவியிலும் சேகரிக்கப்பட்ட நெல் மாதிரிகளை வைத்து பரிசோதித்தனா். இதன்மூலம் கிடைத்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டனா்.
அப்போது, தொடா்ந்து பனிப்பொழிவு இருப்பதால், காய வைத்தாலும் நெல்லில் ஈரப்பதம் குறைவதில்லை என்றும், அதனால், நீண்ட நாள்களாக கொள்முதல் நிலையத்திலேயே காத்திருப்ப தாகவும், எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் மத்தியக் குழுவினரிடம் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், புலவன்காடு வி. மாரியப்பன் உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதேபோல, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரியும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பது குறித்து மத்தியக் குழுவினரிடம் விளக்கிக் கூறினா்.
இதைத் தொடா்ந்து, ஒரத்தநாடு வட்டத்திலுள்ள பாப்பாநாடு, பட்டுக்கோ ட்டை வட்டத்திலுள்ள அலிவலம், பில்லங்குழி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா்.
மத்தியக் குழுவினரின் ஆய்வு குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது :-
ஒவ்வொரு இடத்திலும் மத்தியக் குழுவினா் மூன்று மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்தனா். ஆய்வு அறிக்கைகளை ஒருங்கிணைத்து, தலைமை யகத்துக்கு அனுப்பிவைப்பா். இது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
- நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
- சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
இதனைத்தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் அரக்கோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடியாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக கீழ்க்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் அரசு நேரடி நெல் கொள்மு தல் நிலையங்கள் துவங்கப்பட்டு செயல்படுகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், மங்களக்குடி, திருவாடானை, பாண்டுக்குடி, திரு வொற்றியூர், நெய்வயல், மாவூர், அஞ்சு க்கோட்டை, புல்லூர்(வெள்ளை யாபுரம்), கட்டவிளாகம் (நீர்க்குன்றம்), கவ்வூர், டி.கிளியூர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், கற்காத்தக்குடி, ஆனந்தூர், கூடலூர், பகவதிமங்கலம், கோவிந்தமங்கலம் (ராதானூர்), சோழந்தூர்.கமுதி ஊராட்சி ஒன்றி யத்தில், கமுதி, டி.புன வாசல், எ.தரக்குடி.போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில், சேமனூர், பாண்டிக்கண்மாய், அரியக்குடி.நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், நயினார் கோவில், காரடர்ந்தகுடி, வல்லம், பொட்டக வயல், பி.கொடிக்குளம், எஸ்.வி.மங்கலம்.பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், விளத்தூர், பரமக்குடி, பாம்பூர், கமுதகுடி (பொது வக்குடி), களையூர் (வெங்களக்குறிச்சி), தடுத்தலாங்கோட்டை, கள்ளிக்குடி, தேவனேரி, நெல்மடூர், கீழப்பருத்தியூர், கொளந்தபூரி. ராமநா தபுரம் ஊராட்சி ஒன்றி யத்தில் புத்தேந்தல், கடலாடி ஊராட்சி ஒன்றி யத்தில் ஆப்பனூர், கடலாடி (கடுகு சந்தை), சாயல்குடி.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில், களரி (மாலங்குடி), உத்த ரகோசமங்கை.முது குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மேலக்கொடுமலூர், புளியங்குடி (காக்கூர்) ஆகிய 50 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கூடுதலாக 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன. ஒவ்வொரு நெல் கொள்மு தல் நிலையமும் தொடர்ந்து தினந்தோறும் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், தொடர்ந்து மதியம் 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும். விவசாய பெருமக்கள் தங்கள் விலை நிலத்தில் விளைந்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் விற்று அரசு நிர்ணயித்துள்ள தொகையினை தங்கள் வங்கி கணக்கின் மூலமாக பெற்று பயனடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் நெல் கொள்மு தல் நிலையத்தில் யாருக்கும் எந்த வகையிலும் பணம் செலுத்த வேண்டிய அவசி யம் கிடையாது. நெல் கொள்முதல் நிலையத்தில் குறைகள் ஏதும் இருப்பின் கீழ்கண்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
மண்டல மேலாளர் அலுவலக தொலைபேசி எண்: 94422 30767
உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) தொலைபேசி எண்: 97915 61006
துணை மண்டல மேலாளர் தொலைபேசி எண்: 97860 76408
விழிப்புப்பணி அலுவலக தொலைபேசி எண்: 044-26424560
பொது மேலாளர் (சந்தை) அலுவலக தொலைபேசி எண்: 044-26422448
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077-ல் விவசாயிகள் தொடர்பு கொண்டு நெல் கொள்முதல் நிலையம் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.
- அரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
- நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். கடந்த 2021-22-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 28 ஆயிரத்து 865 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பாண்டில் இதுவரை 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்காக ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா அடங்கல், பட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றின் 2 பிரதிகளோடு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
- அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திறந்து வைத்தார்.
- கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் வே.செழியன் திறந்து வைத்தார்.
கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன்மொழி காங்கமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ஆதி மூலம், குமார், சுரேஷ், கனகராஜ், கணேசன், தமிழ்செல்வன், முருகேசன், ஜெயராமன் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் ராம கோவிந்தன், சிக்கந்தர், ராமு ,சிவ சக்திவேல்,தர்மர், விமல சேகர், முத்துசாமி, சதிஷ்குமார், செந்தில், பழனிவேல் முருகேசன், தண்டபாணி, மகேஸ்வரி, சேட்டு, கருணாநிதி உள்ளிட்டோரும், கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
- 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன.
இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு.
அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.
பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.
இதைத்தொடர்ந்து 2000 டன் நெல் வீதம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- 19,122 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
- மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 2022-23 கொள்முதல் பருவத்தில், இதுவரை 19 ஆயிரத்து122 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான தொகை ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,537 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர், இலவச அலைபேசி எண். 1077 துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் விருதுநகர் தொலைபேசி எண். 04562-252607 ஆகிய எண்ணிற்கு புகார் செய்யலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- பூதலூர், மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரைஸ் மில்லில் திடீரென ஆய்வு செய்தார்.
- நெல் சரியான முறையில் அரவை செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
தஞ்சாவூர்:
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா,
தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் அறிவுறுத்தல்படி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தஞ்சை மாவட்டம் வல்லம், பூதலூர்,
மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரைஸ் மில்லில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல் சரியான முறையில் அரவை செய்யப்படுகிறதா? முறைகேடு ஏதும் நடைபெறுகிறதா? என ஆய்வு செய்தனர்.
- 1,000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.
- 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை ய த்துக்கு எடுத்து வரப்பட்டன.
பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளை யத்துக்கு அனுப்பி வைக்கப்ப ட்டது.
- நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு.
- புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட மேற் கூரையுடன் கூடிய நெல்சேமிப்பு தளங்களை உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலர்
ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து இழப்பு ஏற்படு வதைத் தடுப்பதற்காகத் தமிழகத்தில்
213 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்துவது தொடர்பாக பணியாளர்களிடம் கலந்தாலோசனை செய்தோம். இதன் மூலம் பக்கவாட்டில் தார்பாய் மட்டும் போட்டால் போதும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக ்கோட்டையில் ரூ. 1 கோடி மதிப்பில் பரிசோதனை அடிப்படையில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
இதில், 400 டன்கள் கொள்ளளவு கொண்ட அனைத்து பணிகளுமே தானியங்கி மூலம் செயல்படுத்தும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றால், தொடர்ந்து இத்திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 2.31 லட்சம் மெட்ரிக் டன்கள் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 35.73 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 891 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் அறுவடைப்பணிகள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் 35 ஆயிரத்து 941 நியாய விலைக் கடைகள் நடத்தப்படுகின்றன. புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு விவசாயக் கடனாக ரூ. 13 ஆயிரத்துக்கு 442 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தமிழக முதல்வர் ரூ. 14 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.
நிகழாண்டு உலக சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் கேழ்வரகு சாகுபடி தொடங்கப் படுகிறது. கேழ்வரகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாகவும், மற்ற சிறுதானிய பயிர்களைக் கூட்டுறவு மூலமாகவும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவாகாமல் போகும் நிலையில், அவர்களைத் திருப்பி அனுப்பாமல், அதற்கென உள்ள படிவத்தை நிறைவு செய்து கொடுத்து, பொருட்களைச் பெற்றுச் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பிரபாகரன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்படும்.
- 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகிறது.
இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அது போக கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும். அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படும்.
பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- நாகை மாவட்டத்தில் முதல்முறையாக இந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படுகிறது.
- நெல்கள் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் நவீன அரிசி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மஞ்சகொல்லை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள நவீன அரிசி ஆலைக்கான அடிக்கல்லை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நட்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்மு றையாக அமைக்கப்படும் இந்த நவீன அரிசி ஆலை மாவட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கும் எனவும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு வரும் பொழுது நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும் எனவும் கௌதமன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணேசன், அரிசி ஆலையின் நிர்வாக இயக்கு னர் கணேசன் ஆறுமுகம் மற்றும் வணிகர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.