என் மலர்
நீங்கள் தேடியது "painter"
- சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
- வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 60). இவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் தனது மகள் சண்முக வள்ளியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவரது வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி அதி வேகமாக வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
லாரியை ஒட்டி வந்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து நடேசன் மகன் செந்தில்குமார் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
- ஆத்திரமடைந்த வாலிபர் அரிவாளில் வெட்டினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46) .
இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பிலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
- பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பல்லடம் :
பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஆனந்த ரூபன் (வயது 48). பெயிண்டராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த அவர் சாணி பவுடரை கரைத்து குடித்து உள்ளார். இதில் மயக்கம் அடைந்தார். இதனைப் பார்த்த அவரது வீட்டினர் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆறுமுகம் (65). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது. இதில் கீழே விழுந்த ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை க்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணேசமூர்த்தி நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
- இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது32). பெயிண்டர். இவர் கடந்த 8-ந்தேதி மாலை வேலைக்கு சென்று விட்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி வந்துள்ளனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன், சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உதயமூர்த்தி (23) ,சக்திவேல் (20). இவர்கள் இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி வந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை கண்ணன் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று இரவும் குடித்து விட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த உதயமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரும் கம்பு, கட்டைகளால் கண்ணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.காயம் அடைந்த கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன், சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
உதயமூர்த்தி மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 8 வழக்குகள் இருப்பதாகவும், சக்திவேல் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 2 பேர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
- சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி 1-வது தெருவைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 43) பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
- நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
- இதில் ஆத்திரமடைந்த சுடலைமணி, கணேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களுக்கு கணேசன் (18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வாலிபர் கொலை
சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, கணவரை பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைமணிக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த சுடலைமணி, கணேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.
பெயிண்டர் கைது
இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கங்கைநாத பாண்டியன், சேகர் மற்றும் போலீசார் சுடலைமணியை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, கணேசன் தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே கொலை செய்ய திட்டமிட்டடேன்.
சம்பவத்தன்று சாலையில் நின்று கணேசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற எனக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டேன். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்துவிட்டார் என்றார்.
இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகேஷ் குமார் நேற்று இரவு இந்திராநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வரும்போது, அவரை வழிமறித்த 6 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
- படுகாயமடைந்த மகேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் மகேஷ் குமார்(வயது 37). பெயிண்டர். இவர் நேற்று இரவு இந்திராநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வரும்போது, அவரை வழிமறித்த தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜூவ்நகரை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன், மாரி உள்ளிட்ட 6 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் 20 இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மகேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதில் மகேஷ் குமாருக்கும் பாலா( என்ற) பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது, இந்நிலையில் மகேஷ் குமாரை வெட்டி கொல்ல முயன்ற பாலா( என்ற) பாலமுருகன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- மாணவியின் பெற்றோர் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர்.
- போலீசார் பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெயிண்டருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெவித்தனர்.
மேலும் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு தங்களது மகளுக்கு அறிவுரை கூறினர். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். இதனையடுத்து பெயிண்டர் கடந்த மாதம் 20-ந் தேதி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ராமேசுவரத்துக்கு கடத்தி சென்றார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் மாணவியுடன் அவர் இருந்தார். கடந்த 23-ந் தேதி பெயிண்டர் மாணவியை அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள முல்லை நகரில் தனியாக வீடு எடுத்து தங்கினர். அப்போது பெயிண்டர் மாணவியை 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த 8-ந் தேதி 2 பேரும் அங்கு இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிட்டாம்பாடி பிரிவில் உள்ள சந்துகாடு என்ற இடத்தில் உள்ள பெயிண்டரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.
மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது அவர் பெயிண்டருடன் சந்து காட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பெயிண்டரை கைது செய்து மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெயிண்டர் மாணவியை திருமணம் செய்து 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை கடத்தி சென்று 16 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோமதிசங்கரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.
- போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கோமதிசங்கர்(வயது24). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோமதி சங்கரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த வாளை கோமதி சங்கரின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.
இதனால் அதிர்ச்சியில் கோமதி சங்கர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாளை கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்தது கணபதி மோர்மார்க்கெட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூர்யா(25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னையை சேர்ந்த சோலைராஜ் மயிலாடுதுறையில் வேைல பார்த்து வந்தார்.
- மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்.
இவரது மகன் சோலைராஜ் (வயது 32). பெயிண்டர்.
இவர் தற்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.