என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pakistan Parliamentary Election"
- ஆகஸ்ட் வரை ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் இடைக்கால அரசாங்கம் நடைபெற்றது
- தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலானது
கடந்த 2022 ஏப்ரலில், பாகிஸ்தானில் அதுவரை நடைபெற்று வந்த பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.
இவ்வருடம் ஆகஸ்ட் 10 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை, அதன் காலம் முடிவடையும் 3 நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் ஷாபாஸ் அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அரிஃப் ஆல்வி கலைத்தார்.
அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்றிலிருந்து 90 நாட்களில் (நவம்பர் 7) பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.
இதனையடுத்து, பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கு தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதில் மனுவில், அந்நாட்டின் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் தேதியை தெரிவித்தார். இதன்படி, வரும் 2024 பிப்ரவரி 11 அன்று அந்நாட்டில் பாராளுமன்றத்திற்கான பொதுதேர்தல் நடைபெறும்.
அந்நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தும் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப், முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடத்தும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலவல் பூட்டோ ஜர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.
பாகிஸ்தானில் வருகிற 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதில் பல முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை நடத்துகின்றனர்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் வேட்பாளராக சயீத் இம்ரான் ஷா வாலி பஞ்சாப் மாகாணம் சாகிவால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அஜ்மீரில் உள்ள கவாஜாகளில் நவாஸ் மற்றும் சுபிதர்காவில் பிரார்த்தனை நடத்தினார்.
2 தடவை எம்.பி. ஆகியுள்ள இவர் தனது மத குரு மூலம் பிரார்த்தனை செய்தார். முன்னாள் பிரதமர் ராஜா பரிவேஷ் அஷ்ரப் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர். ராவல்பிண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. இவரும் அஜ்மீர் தர்கா மதகுரு மூலம் பிரார்த்தனை செய்தார்.
பிரதமராக இருந்தபோது கடந்த 2013-ம் ஆண்டு இங்கு நேரில் வந்து பிரார்த்தனை செய்தார். தற்போது 2-வது தடவையாக பிரார்த்தனை மேற்கொள்கிறார். இந்த தேர்தலில் தனது பாகிஸ்தான் மக்கள் கட்சி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வேண்டும் என விரும்புவதாக கூறினார்.
அண்டை நாடான இந்தியாவுடன் தனது கட்சி எப்போதும் நல்லுறவுடன் இருந்து வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அஜ்மீர் தர்காவின் மத குரு சயீத் பிலால் சிஸ்டி முக்கிய பிரமுகர்களுக்காக பிரார்த்தனை செய்தார்.
தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷரிப்) தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பலம் 199 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 137 ஆகவும் உள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
எங்கள் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெறும் கைபர் பகதுங்வா மாகாணத்தில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்ட இம்ரான் கான் நேர்மையான தலைவரால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அதிக அனுபவம் இல்லாமலே நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றோம். மக்களின் செல்வாக்குடன் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்துள்ளார். #ImranKhan #PakistanElection
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் முஷாபர்கார் என்.ஏ.-182 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முகமது உசேன் என்கிற முன்னா ஷேக் போட்டியிடுகிறார்.
இவர் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதில் 300 ஏக்கர் நிலம், மற்றும் தோட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் தங்களது சொத்து மதிப்பை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி நான் எனது உண்மையான சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.
அதுபோன்று பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். #MohammedHussain #Pakistanelections
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.
அதில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி (62) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இத்தகவலை சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் முராத் அலி ஷா அளித்த இப்தார் விருந்தின்போது அறிவித்தார்.
இவர் தனது சொந்த தொகுதியான நவாப்ஷாவில் களம் இறங்குகிறார். இதன் மூலம் அவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி அரசியலுக்கு வருகிறார்.
இவர் 1987-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை மணந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 1990-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாப்ஷா தொகுதியில் களம் இறங்கினர்.
2007-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழி நடத்தினார்.
2008 பாராளுமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற செய்தார். அதையடுத்து 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் 11-வது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துள்ள அவர் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றார்.#AsifAliZardari #parliament
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்