search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan presidential election"

    எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் பாகிஸ்தான் அதிபர் தேர்தலிலும் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வேட்பாளர் வெற்றிபெறும் சூழல் கனிந்துள்ளது. #Pakistanpresidential
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 9-ம் தேதியுடன் நிறைவடைவதால் அந்த  பதவிக்கு செப்டம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ள இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  டாக்டர் ஆரிப் ஆல்வி நிறுத்தப்பட்டுள்ளார்.

    அவரை எதிர்த்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் நடத்திவந்த பேச்சுவார்த்தை கடந்த 25-ம் தேதி தோல்வியில் முடிந்தது.

    எனவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அய்ட்ஸாஸ் அஹ்ஸன் மற்றும் ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அதிபர் பதவிக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று முடிவடைந்து மூன்று மனுக்களும் ஏற்கப்பட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் சர்தார் மொஹம்மத் ராஸாகான் அறிவித்துள்ளார். 

    நாளை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள் என்னும் நிலையில் ஆளுங்கட்சி வேட்பாளரான டாக்டர் ஆரிப் ஆல்வி எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistanpresidential
    ×