search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panang Kizhangu Recipes"

    பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்று பனங்கிழங்கில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனங்கிழங்கு - 3,
    சின்ன வெங்காயம் - 10,
    பச்சை மிளகாய் - 3,
    பூண்டு - 2 பல்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் சீரகம், தேங்காய் துருவலை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மஞ்சள் விழுதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும்.

    வெந்தவுடன் நாரை உரித்துவிட்டு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

    இறக்குவதற்கு முன்… தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×