search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat elcetions"

    மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #panchayatpoll #TrinamoolCongress #MamataBanarjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 14-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. 621 ஜில்லா பரிசித்துகளுக்கும், 6 ஆயிரத்து 123 பஞ்சாயத்து சமிதிகளுக்கும், 31 ஆயிரத்து 802 கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இதற்கிடையே, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.  இரவு 7 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 621 ஜில்லா பரிஷத்களில் திரிணாமுல் காங்கிரஸ் 361 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வென்றுள்ளது.  

    இதேபோல்,  மொத்தமுள்ள 6123 பஞ்சாயத்து சமிதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 4430 இடங்களிலும், பாஜக 385 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், கிராம பஞ்சாயத்து தேர்தலிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் நாங்கள் 90 சதவீத இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளோம்.  இதிலிருந்தே, மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் எங்களுக்கு மக்களின் பெரும் ஆதரவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார். #panchayatpoll #TrinamoolCongress #MamataBanarjee
    ×