என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » panmunjom
நீங்கள் தேடியது "Panmunjom"
இரு நாட்டு எல்லையில் உள்ள பான்முஞ்சோமில் துப்பாக்கி, பாதுகாப்பு சாவடிகளை அகற்றிக்கொள்ள இரு கொரிய நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. #NorthKorea #SouthKorea #Panmunjom
சியோல்:
1953-ம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர், வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது இவ்விரு நாடுகள் இடையே நட்புறவு துளிர்த்து வருகிறது.
வட கொரிய தலைவர் கிம்ஜாங் அன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முடிவுக்கு கொண்டு வர இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்த நிலையில், இரு நாட்டு எல்லையில் உள்ள பான்முஞ்சோமில் துப்பாக்கி, பாதுகாப்பு சாவடிகளை அகற்றிக்கொள்ள இரு கொரிய நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த பான்முஞ்சோமில்தான் இரு நாட்டு படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது அங்கு துப்பாக்கி பாதுகாப்பையும், பாதுகாப்பு சாவடிகளையும் விலக்கிக்கொள்ள முடிவு எடுத்து இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வேகமாக வளர்வதற்கு வழி வகுக்கும்.
இது தொடர்பாக தென்கொரியா விடுத்துள்ள அறிக்கையில், “ அக்டோபர் 25-ந் தேதிக்குள் (நாளைக்குள்) பான்முஞ்சோமில் இருந்து துப்பாக்கி பாதுகாப்பு மற்றும் ராணுவ பாதுகாப்பு சாவடிகளை அகற்றிக்கொள்ள இரு கொரியாக்களும், அமெரிக்க படை மையமும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் அடுத்த இரு நாட்கள் மூன்று தரப்பினரும் கூட்டு சோதனை நடத்திக்கொள்ளவும் சம்மதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. #NorthKorea #SouthKorea #Panmunjom

×

X