search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parcel"

    • சசிகலாவுக்கு ஒரு ஹேர் ட்ரையர் பார்சல் வந்துள்ளது.
    • ஹேர் ட்ரையர்-ஐ வாங்கிய பசவராஜேஸ்வரி அது எப்படி வேலை செய்கிறது என்று சோதித்து பார்ப்பதற்காக ஆன் செய்துள்ளார்.

    கர்நாடகாவில் பார்சலில் வந்த ஹேர் ட்ரையர் வெடித்துச் சிதறியதில், பசவராஜேஸ்வரி என்பவரின் காய் விரல்கள் துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் பாகல்காட் பகுதியில் சசிகலா, பசவராஜேஸ்வரி என்ற 2 பெண்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர். பசவராஜேஸ்வரியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றும்போது உயிரிழந்தார்.

    இந்நிலையில் சசிகலாவுக்கு ஒரு ஹேர் ட்ரையர் பார்சல் வந்துள்ளது. ஆனால் சசிகலா ஊரில் இல்லாததால் அந்த பார்சலை வாங்கி ஹேர் ட்ரையர் வேலை செய்கிறதா என்று பார்க்குமாறு பசவராஜேஸ்வரிவிடம் சசிகலா கூறியுள்ளார்.

    இதனையடுத்து ஹேர் ட்ரையர்-ஐ வாங்கிய பசவராஜேஸ்வரி அது எப்படி வேலை செய்கிறது என்று சோதித்து பார்ப்பதற்காக ஆன் செய்துள்ளார். அப்போது திடீரென ஹேர் ட்ரையர் வெடித்து சிதற பசாம்மாவின் முகம், கைகளில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக பசவராஜேஸ்வரியை உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த வழக்கின் விசாரணையில் சசிகலா ஹேர் ட்ரையர் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

    முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது சசிகலாவிற்கும் பசவராஜேஸ்வரிக்கும் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
    • ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார்.

    அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினர்.

    பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்துள்ளளார்.
    • கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த தருமகுளம் கடைவீதியில் பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இவரது கடையில் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் நேற்று பரோட்டா வாங்கி சென்றுள்ளார்.

    வீட்டில் சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்து பார்த்த போது குருமாவில் பூரான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதனைஅடுத்த மூர்த்தி இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததார்.

    புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.

    மேலும், கடையை முறையாக பராமரிக்காததால் அதனை சீரமைத்த பின்னரே கடையை திறக்க வேண்டும் எனக்கூறி கடையை மூடி சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
    • பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதையடுத்து விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.

    இதையடுத்து கடத்தல் காரர்கள் விமான பார்சல் மூலம் தங்கம் கடத்த தொடங்கினர். அதனையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதனை அதிகாரிகள் சோதித்து பார்த்தபோது, அதில் பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அந்த பார்சலை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் கேரளாவுக்கு விமான பார்சல் மூலம் தங்கம் கடத்தி வர முயன்றது இது 4-வது முறையாகும்.

    • சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.
    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தபால்துறை யின் அகில இந்திய ஆர்எம்எஸ், எம்எம்எஸ் ஊழியர் சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோட்டப்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில முன்னாள் அமைப்பு செயலாளர் தர்மதாஸ் தேசிய கொடியேற்றினார். சம்மேளனக் கொடியை மாநில செயலாளர் ரமேஷ் ஏற்றி வைத்தார். முன்னாள் மாநிலத்தலைவர் கணேசன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். நாகை மாலி எம்எல்ஏ, மாநில செயலாளர் பரந்தாமன், எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் அஞ்சலகத்தில் ஸ்பீடு போஸ்ட், பார்சல் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோட்ட துணைத் தலைவர் மனோஜ் குமார் வரவேற்றார்.

    முடிவில் கிளைச்செயலாளர் சத்தியராஜ் நன்றி கூறினார்.

    • சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    சேலம்:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன.

    தற்போது இவற்றை அனுப்ப நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    • வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
    • பஸ்சுக்கு மூன்று சரக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் நாளை 3ம் தேதி முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கு 250 கிராமுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு போக்குவர–த்து கழக வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''எஸ்.இ.டி.சி., டிப்போ கோவையில் தான் உள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.நாகர்கோ–வில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், அந்தந்த கிளையில் இருந்து இயக்கப்படுகிறது. கிளைகளில் பார்சல், கூரியர் முன்பதிவு செய்வது குறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வரும்'' என்றனர்.

    • அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அந்த கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. நேற்று மட்டும் 497 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு சுமார் 502 கிேலா பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மாநகராட்சியில் உள்ள 5 கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் வரையில் ரூ.1 லட்த்து 42 ஆயிரம் அபராதமாக வசூலாகியுள்ளது.

    இதனால் டீக்கடைகள், ஓட்டல்களின் உரிமையாளர்கள் தொடர்ந்து கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் திருச்சி மாநகரில் கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்கள் கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், டீ கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி தான் பார்சல்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்பார், சட்னி உள்ளிட்ட குழம்பு வகைகளும் பாலித்தீன் பைகளில் தான் வழங்கபடுகிறது.

    ஆனால் தற்போது திருச்சி மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதுவும் அனைத்து கடைகள், நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு இருந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கிறார்கள். அந்த பொருட்களையும் பறிமுதல் செய்கிறார்கள்.இதனால் தொடர்ந்து ஓட்டல்கள், கடைகள் நடத்த முடியாமல் திணறி வருகிறோம். முடிந்த அளவிற்கு வாழை இலையில் தான் பொது மக்களுக்கு பார்சல் வழங்கி வருகிறோம்.

    ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஓட்டல்களுக்கு உணவு பொருட்கள் வாங்க வருகின்ற பொழுது வீட்டிலிருந்தே பைககள் அல்லது பாத்திரங்களை கொண்டு வந்தால் அதில் தங்களுக்கான உணவு பொருட்களை வாங்கி செல்லலாம். எங்களுக்கும் அதிகாரிகள் ஆய்வின் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

    பொதுமக்களும் எவ்வித அச்சமுமின்றி வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லலாம் என்றனர்.

    ×