என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » parents fail
நீங்கள் தேடியது "parents fail"
கணவன்-மனைவி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கேரள ஐகோர்ட் நீதிபதி குழந்தைக்கு பெயர் சூட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. #KeralaHighCourt #ChildName
கொச்சி:
கேரள ஐகோர்ட்டுக்கு ஒரு ருசிகரமான வழக்கு வந்தது. கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் பிறந்த 2-வது குழந்தைக்கு பெயர் சூட்டும் தகராறு தொடர்பான வழக்கு அது.
கணவன்-மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில், அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் இருக்கிறது.
குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது. ஆனால், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தந்தை தரப்பு வாதிட்டது. அவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று தானே பெயர் சூட்டினார். தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.
குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். #KeralaHighCourt #ChildName

×

X