search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parking charges"

    • மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு சலுகை கிடைக்காது.
    • பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயdisணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளும் முடிந்துவிட்டால் சென்னையில் எந்த பகுதிக்கும் எளிதாக சென்று வர முடியும்.

    அதற்கு ஏற்ற வகையில்தான் மின்சார ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயிலும் இணைக்கப்படுகிறது. பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் நடந்து செல்லும்படி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதனால் தற்போது இரு சக்கர வாகனங்களில் தொலை தூரங்கள் வரை செல்வதை தவிர்த்து விட்டு பலர் மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் டூ வீலரை நிறுத்தி செல்கிறார்கள். பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    அதாவது மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள்தான். இதில் ஏன் பயணிகளிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்று மின்சார ரெயில் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    ×