search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament Election 2019"

    பஞ்சாபில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வரும் ஆன அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. 13 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனை போட்டி நடைபெறுகிறது.

    காங்கிரஸ் கட்சிக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு பிரசார பீரங்கியாக இருக்கிறார். சில தினங்களாக சித்து மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வரும் ஆன அமரிந்தர் சிங் எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.



    இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தொய்வு ஏற்படுமோ? என்று தலைவர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ‘‘சித்து மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்’’ என அமரிந்தர் தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வருகிற 28-ந்தேதி டெல்லி வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #MamataBanerjee
    புதுடெல்லி:

    மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மேற்குவங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார்.

    எனவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை பாரதிய ஜனதாவுக்கு ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். சமீபத்தில் டெல்லி வந்த அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரசை பொறுத்த வரை ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறது.

    ஆனால் பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ள சில கட்சிகளுக்கு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லை.

    குறிப்பாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் இதை விரும்பவில்லை. மம்தாவும் கூட காங்கிரசை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்.

    இதனால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு ஒருமித்த முடிவுக்கு வர மம்தா பானர்ஜி விரும்புகிறார்.

    இதற்காக அவர் மீண்டும் டெல்லி வர உள்ளார். இந்த மாதம் இறுதியில் டெல்லி வர உள்ள அவர் சில நாட்கள் டெல்லியிலேயே தங்கி இருந்து எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பு பணிகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளார்.

    வருகிற 28-ந்தேதி அவர் டெல்லி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30-ந்தேதி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை அவர் கூட்ட உள்ளார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல சந்திரபாபு நாயுடுவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். 17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும் என்றும், எதிர்க்கட்சிகள் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    குறைந்தபட்ச கொள்கை திட்டத்தின் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    மேலும் 28-ந்தேதி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து குழுவாக சென்று தேர்தல் கமி‌ஷன் தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளனர். ஓட்டு எந்திர முறையை மாற்றிவிட்டு பழைய மாதிரி ஓட்டு சீட்டு முறையில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் தேர்தல் கமி‌ஷனிடம் வற்புறுத்த உள்ளனர். ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக சமீப காலமாக எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுகின்றன. ஓட்டு சீட்டு முறைதான் இந்த சந்தேகத்தை போக்கும் ஒரே வழி என்பதால் ஓட்டு சீட்டு முறையை வற்புறுத்த இருக்கிறார்கள்.

    இதுமட்டுமல்லாமல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் பிரச்சினை, கேரள வெள்ளத்திற்கு மத்திய அரசு சரியாக உதவி செய்யாததாக எழுந்துள்ள பிரச்சினை போன்றவை சம்பந்தமாகவும் எதிர்க்கட்சிகள் ஓட்டுமொத்தமாக குரல் எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன் ஏற்கனவே நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்திருந்த போது மம்தா பானர்ஜி, சந்திர பாபுநாயுடு, குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.

    தற்போது கேரள வெள்ளத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக சந்திரபாபு நாயுடு, பிரனாயி விஜயனிடம் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி ரூ.10 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.

    ரபேல் விமான ஊழல் பிரச்சினையில் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக ராகுல்காந்தி அனைத்து கட்சி தலைவர்களிடம் ஏற்கனவே விளக்கி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MamataBanerjee
    முதலில் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யலாம் என்று மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியுள்ளார். #MamataBanerjee
    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூட்டாட்சி முன்னணி என்ற ஒரு புதிய முன்னணியை தோற்றுவித்துள்ளார்.

    இந்த அமைப்புக்கு ஆதரவு திரட்டும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

    நேற்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது கூட்டாட்சி முன்னணி சார்பில் 19-ந்தேதி நடத்தப்பட இருக்கும் பேரணி பற்றி விளக்கமாக எடுத்து கூறினார்.

    அதன்பிறகு மேலும் 9 கட்சி தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்தார். இதனால் மம்தா பானர்ஜி புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதுபற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி அளித்த பதில் வருமாறு:-

    எனக்கு பிரதமர் ஆக வேண்மென்று எந்த ஆசையும், லட்சியமும் இல்லை. எனது முதன்மையான நோக்கம் என்னவென்றால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.


    இதற்காகத்தான் நான் பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறேன். எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும்.

    பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. அப்படி இருக்கும் போது பாராளுமன்றத்திற்கு வெளியேயும், ஏன் ஒன்று சேர்ந்து போராட முடியாது.

    எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து வருவதால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது பா.ஜ.க. தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் அவர்கள் எதிர் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எதிர் கட்சி கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவார் என்பதில் பிரச்சினை இல்லை. கூட்டுத் தலைமையை ஏற்படுத்தலாமா? என்று நன்கு ஆலோசித்து வருகிறோம். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதில் முழு வடிவம் கிடைக்கும்.

    எனவே பிரதமர் யார் என்பதில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு அதுபற்றி முடிவு செய்யலாம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #ParliamentElection #MamataBanerjee
    ×