என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary Election"

    • பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார்.
    • மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.

    அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில் ரோகன்னா, வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால், கலிபோர்னியாவில் அமி பெரரா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இதில் ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோர் தொடர்ந்து 4-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பிரமீளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.
    • 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் பிரம்ம சக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் செல்வின், செந்தூர் மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், சோபியா, மாவட்ட பொரு ளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்கு மார், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத் தலைவரும், நகர செயலாளருமான சந்தையடி யூர்மால் ராஜேஷ், யூனியன் சேர்மன்கள் ரமேஷ், வசுமதி அம்பாசங்கர், கோமதி ராஜேந்திரன், ஜெயபதி, திருச்செந்தூர் நகராட்சி சேர்மன் சிவ ஆனந்தி, காயல்பட்டணம் முத்து முகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச் செல்வன், இந்திரகாசி, சாகுல் ஹமீது, கணேசன், ஆறுமுக பாண்டியன், ராஜலெட்சுமி, ரவி செல்வகுமார், முகம்மது அலி ஜின்னா, மாவட்ட அமைப்பாளர்கள் மகாவிஷ்ணு, சந்தடி ரவி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் நவின் குமார், ரமேஷ், சதீஷ், முத்து முகமது, சுடலை, ரவி, பார்த்திபன், ஜோசப், கொம்பையா, கோட்டாளம், இசக்கி பாண்டியன், பாலமுருகன், பொன் முருகேசன், ஜெயக்கொடி, சுப்பிபிரமணியன், சரவண குமார், இளையராஜா, ராமசாமி, சுரேஷ் காந்தி, சிவக்குமார், ஆஸ்கர், உடன்குடி தொடக்க வே ளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், உடன்குடி பேரூராட்சி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், இளைஞர் அணியை சேர்ந்த பாய்ஸ் அஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    இக்கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது, வரும் 27-ந் தேதி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி பணிகள் உடனடியாக தொடங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல்ஆட்சியை இந்திய நாடேதிரும்பி பார்க்கிறது. இந்தியாவிற்கு எடுத்துக் காட்டாக நடந்து வருகிறது.வரும் பாராளுமன்றதேர்தலை சந்திக்க பணிகளை இப்போழுதேதொடங்க வேண்டும் அனைவரும் ஒற்றுமையுடன் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பா. ஜனதா அரசு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் வெற்றி காண துடிக்கிறது. அதற்கு தமிழக மக்களாகிய நாம் இடம் கொடுக்கக் கூடாது, அனைத்து ஜாதியினரையும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

    ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் நன்றி கூறினார்.

    • செய்யக்கூடிய வேலையில் நேர்மை இருந்தால் வெற்றி கிடைக்கும்.
    • பா.ஜ.க. தமிழர்களுக்கான கட்சி.

    சென்னை :

    சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தமிழக பா.ஜ.க. கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நடந்தது. கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் பெப்சி சிவா தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகர்-நடிகைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    விழாவுக்குப் பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செய்யக்கூடிய வேலையில் நேர்மை இருந்தால் வெற்றி கிடைக்கும். கலைஞன், படைப்பாளி ஆகியோர் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள். பா.ஜ.க.வை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச்செல்வோம். பா.ஜ.க. தமிழர்களுக்கான கட்சி. தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக இருக்கக்கூடிய முதன்மை கட்சி பா.ஜ.க.தான். தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக்கொண்டிருப்போம்.

    சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதல்-அமைச்சருக்கு திருமாவளவன் முதலில் 'டுவிட்' செய்யவேண்டும். பெண் போலீஸ் மீது கை வைத்த 2 இளைஞர்களிடம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மன்னிப்பு எழுதி கடிதம் வாங்கினர். நடவடிக்கை எடுக்கவேண்டாம் என பெண் போலீசிடமும் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.

    இந்தியாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கும் நடைபெறாது. பாதிக்கப்பட்ட பெண் போலீசிடமே நடவடிக்கை எடுக்கவேண்டாம் என கடிதம் எழுதி வாங்கியது பற்றி திருமாவளவன் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பவேண்டும். பாதிக்கப்பட்ட பெண் போலீசுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை முதல்-அமைச்சர் சொல்லவேண்டும்.

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுமுகமாக செல்வதால், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உடன்தான் கூட்டணி. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிக்கும் மைல்கல்லாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் நடிகர் பாக்யராஜ், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், எஸ்.சி.சூர்யா, பிரமிளா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. ஒரு முக்கியமான கட்சி.
    • மம்தா பானர்ஜி நாட்டின் அடுத்த பிரதமராக திறன் அவருக்கு இருக்கிறது.

    நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென், கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த பாராளுமன்ற தேர்தல், பா.ஜ.க.வுக்கு ஆதரவான ஒற்றை குதிரை பந்தயம் போல அமையும் என நினைத்தால் அது தவறு. இந்தத் தேர்தலில் மாநிலக்கட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்பது தெளிவு.

    தி.மு.க. ஒரு முக்கியமான கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் உறுதியாக முக்கியமான கட்சி. சமாஜ்வாடி கட்சியும் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாட்டின் அடுத்த பிரதமர் ஆக முடியுமா என்று கேட்டால், அதற்கான திறன் அவருக்கு இருக்கிறது.

    ஆனால் பா.ஜ.க.வுக்கு எதிரான பொது அதிருப்தி சக்திகளை அவர் ஒருங்கிணைக்கும் வழியில் இழுக்க முடியுமா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி 93 கேள்விகள் எழுப்பி உள்ளன.
    • பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை முற்றிலும் அவசியம்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது தன்னிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து, அவர் கூறியதாவது:-

    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை. எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவானால், அதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

    ஆனாலும் இதையெல்லாம் பேசுவதற்கு காலம் வந்து விடவில்லை.

    இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை, வரவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலும், அதைத் தொடர்ந்து தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களின் சட்டசபை தேர்தலும்தான். நாங்கள் இதில் கவனம்செலுத்துவோம். பாராளுமன்ற தேர்தல் பற்றி அப்புறம் பார்ப்போம்.

    திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் சந்திக்கின்றனர். மூன்றாது அணி, நான்காவது அணி அமைப்பது தொடரலாம். ஆனால் எதிர்க்கட்சியில் காங்கிரஸ் இருப்பது அவசியம்.

    இப்போது அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு தொடரும்,

    எந்த எதிர்க்கட்சி அணியைப் பொறுத்தமட்டிலும் அதற்கு வலுவான காங்கிரஸ் தேவை.

    பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், கட்சி தலைவர் கார்கேயும், மூத்த தலைவர்களும் என்ன யுக்திகள் வேண்டுமோ அதை வகுப்பார்கள். கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

    அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் இடம் பெறவில்லையே என கேட்கிறீர்கள். நான் அவ்வாறு கருதவில்லை. அதற்கென்று கொள்கைகள் இருக்கும். அதற்கு மேல் நான் இதில் சொல்ல விரும்பவில்லை.

    அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில் 16 கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு எழுதிய கடிதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி கையெழுத்து போடவில்லை. ஆனால் அவர்கள் ஆதரவு தரத்தான் செய்கிறார்கள்.

    அதானி நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி 93 கேள்விகள் எழுப்பி உள்ளன. 100 என்ற எண்ணிக்கையை அடைவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை முற்றிலும் அவசியம். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மாற்று இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்தது.
    • பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மண்டல வாரியாக பாரதிய ஜனதா பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல் டெல்லயில் நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக வடக்கு மண்டல பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் இமாசலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்தியிருந்தார்.
    • இ.பி.எஸ். தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் மாநாட்டை நடத்தினார்.

    சென்னை:

    மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு இன்று நடைபெற்றுது.

    இதற்கிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், தன்னால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் இன்று மாநாட்டை நடத்தியுள்ளார்.

    இதேபோல், மேற்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில் அடுத்த மாநாட்டை நடத்த ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இன்றைய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், செப்டம்பர் 3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளேன். இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி தான். பாராளுமன்ற தேர்தலுக்கு விரைவில் நாம் தயாராக வேண்டும் . உண்மையான உறுப்பினர்களை நாம் சேர்க்கப் போவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை கண்டிப்பாக நிறுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

    • சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம்.
    • இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது.

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடைபெற்றது.

    முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கருணாநிதி கூறுவார். இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது. இப்போது திமுகவில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது.

    மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நான் இப்போது வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும்.

    சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளுடன் சேர்த்து, அடிமைகளின் எஜமானர்களை விரட்டி வீட்டுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • இதனால் பெருமளவில் பொருள், நேரம், மனிதவளங்கள் மிச்சமாகும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது
    • முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட்டது

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது.

    இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இன்று அந்த கமிட்டியின் முதல் சந்திப்பு நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணைய இயக்குனர் என் கே சிங், முன்னாள் மக்களவை பொது செயலாளர் சுபாஷ் கஷ்யப் மற்றும் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கு பெற்றனர்.

    முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவை மட்டுமல்லாமல் சட்ட ஆணையத்தின் கருத்தை கேட்கவும் சட்டத்துறை முடிவெடுத்துள்ளது.

    இந்த சந்திப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கலந்து கொள்ளவில்லை. அவரையும் உறுப்பினராக்கியிருந்தும், தான் இதில் பங்கு பெற விரும்பவில்லை என அவர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேலும் சில மாநிலங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் அமலுக்கு வந்தால் இந்த மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும்.
    • பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாநகர தெற்கு மண்டல் சார்பாக முத்தையாபுரம் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை

    மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் உமரி சத்தியசீலன், ராஜா, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மகளிர் அணி தலைவி செல்வி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் வாரியாக பொதுமக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் குலசேகர ரமேஷ்,பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, விவசாய அணி மண்டல் தலைவர் முத்துராஜ், ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கையப்பன், தெற்கு மண்டல் துணை தலைவர் ஜெயசித்ரா ராமலட்சுமி பொய் சொல்லான், மண்டல் செயலாளர்கள் செல்வம், அருண் பாபு, சிவதானு, முத்துகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம் , விந்தியா முருகன், வெளிநாடு தமிழர் நலன் பிரிவு மாவட்ட செயலாளர் பிரேம் குமார், உள்ளாட்சி அமைப்பு பிரிவு மாவட்ட செயலாளர் முத்து பெரியநாயகம், சமூக வலைதள பிரிவு மண்டல் தலைவர் அஜய், தரவுதளவு மேலாண்மை பிரிவு மண்டல் தலைவர் ராஜ்குமார், அமைப்புசாரா பிரிவு மண்டல் தலைவர் அருள் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து திருடர்களின் பெயர்களும் ஏன் "மோடி" என உள்ளது என்றார் ராகுல்
    • 2023 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ராகுல் எம்.பி. பதவியை இழந்திருந்தார்

    கடந்த 2019ல் இந்திய பாராளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்று கர்நாடகாவில் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி, மோடி, மோடி என ஏன் உள்ளது? நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..." என கருத்து தெரிவித்திருந்தார்.

    ராகுலின் கருத்து தங்கள் மோடி இனத்தையே அவமதிப்பதாக கூறி 2019, ஏப்ரல் 16 அன்று பா.ஜ.க.வை சேர்ந்த பூர்ணேஷ் மோடி (58) எனும் குஜராத் மாநில சட்டசபை உறுப்பினர், கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றை குஜராத் கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பானது.

    அதனை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் அவர் குற்றவாளி என தீர்ப்பு உறுதியாகி 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போனது.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ராகுல் பாராளுமன்ற உறுப்பினரானார். இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வழக்கினால், 2023 மார்ச் 24 முதல் 2023 ஆகஸ்ட் 7 வரை ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தாத்ரா நகர் மற்றும் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும், கோவா, டமன் மற்றும் டியு யூனியன் பிரதேசத்திலும் உள்ள பா.ஜ.க.வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை பொறுப்பாளராக பூர்ணேஷ் மோடியை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

    இப்பதவி பூர்ணேஷ் இதுவரை ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.
    • எந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிலிருந்து, முதல் நிலை சரிபார்ப்பு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலிருந்து, அலுவலர்களுக்கு பயிற்சியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் ஆகியவை, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    ×