என் மலர்
நீங்கள் தேடியது "Party"
- வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
- 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாழப்பாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.
வாழப்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, பேளூர் நகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி , வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சிங்கிபுரம் ராம்கோ நிறுவன பணியாளர்கள் மணிவேல், முனியசாமி, வடிவேல், துளி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், உதயா அறக்கட்டளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர், 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கினர்.
- மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர்.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வார ஞாயிறு அன்று, முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
போதமலை அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது. மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர். இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். மலைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர்.
விழாவையொட்டி, நேற்று இரவு கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முதலில் பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தார். அதன்பிறகு கோவில் முன்பு ஆடுகளை வெட்டி பலியிட்டனர். அடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. இவ்விழாவில் 46-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
பலியிட்ட ஆடுகளை அதிகாலை வரை சமைத்து ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. சுமார் 2500 கிலோ இறைச்சி சமைத்து, பச்சரிசி பொங்கலுடன் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.
இது குறித்து விழாக்குழுவினர் மக்கள் நோய்நொடி நீங்குவதுடன், விவசாயம் செழிக்கவும். குடும்ப பிரச்னைகள் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பரம்பரை பரம்பரையாக இந்தவிழாவை நாங்கள் நடத்தி வருகிறோம் என்றனர்.
- தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்தது.
- அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்
கடலூர்:
புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூர் அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் அமைப்பு செயலாளர் திருமார்பன், மாவட்ட செயலாளர் மருதமுத்து, மாவட்ட துணை செயலாளர் திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பழனிவேல்,கிட்டு, ஸ்ரீதர், ஜவகர், சுபாஷ், பாலமுருகன், ராமச்சந்திரன், கலைஞர், வெங்கடசாமி, புலிக்கொடியன், திருமாறன், காட்டுராஜா, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தோகைமலை அருகே சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் 14ம் ஆண்டு விழா நடைபெற்றது
- கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்
கரூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியினுடைய 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட செயலாளர் தோகைமலை பிச்சை, இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார்.
- மதிமுகவின் தலைமைக் கழகமான தாயகம் கட்டிடம் வைகோவின் தனிப்பட்ட பெயரில் கிரையம் செய்யப்ப ட்டுள்ளது.
திருப்பூர்:
ம.தி.மு.க. அவை தலைவர் துரைசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அப்போது அவர் கூறியதாவது:-
மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறியதற்கு காரணம் வைகோவின் தொடிப்பு மிக்க பேச்சை நம்பி ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்ததாகவும் ஆனால் தற்போது பொதுச்செயலாளரின் நடவடிக்கையால் அங்கீகாரம் ரத்து ஆகும் நிலை சென்றது வேதனை அளிப்பதாகவும் இதனை காப்பாற்றவே திமுகவை இணைக்க வலியுறு த்தினேன். தனது கடிதம்
புறக்கணிக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார் கடிதத்தில் கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சொந்தமான சொத்துக்கள் உள்ளது அவை யாவும் தனது தனிப்பட்ட பெயரில் இல்லை தொழிற்சங்க பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயரில் உள்ளது. அவை அனைத்தும் மதிமுக துவங்கப்படுவதற்கு முன்னதாகவே வாங்கப்பட்டது . ஆனால் மதிமுகவின் தலைமைக் கழகமான தாயகம் கட்டிடம் வைகோவின் தனிப்பட்ட பெயரில் கிரையம் செய்யப்ப ட்டுள்ளது. இதுவரை கட்சியின் பொருளாளர் எந்த ஒரு காசோலைகளும் கையெழுத்திட வில்லை வைகோவே கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பணம் எடுத்து பயன்படுத்தி வருகிறார். தன்னைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எந்த ஒரு தொண்டனும் உளவுபூ ர்வமாக எண்ணுவதில்லை. வைகோவின் தூண்டுதலின் காரணமாகவே தன்னை நீக்க வேண்டும் என கடிதமும் தீர்மானமும் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 30 ஆண்டு காலமாக கட்சியில் இருந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தின் காரணமாகவே கடிதம் எழுதி திமுகவில் இணைக்க வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். தான் அரசியல் வாழ்வில் இருந்து விலகி அண்ணா பெரியார் பாதையில் பயணிக்க இருக்கிறேன். தன்னை கட்சியிலிருந்து நீக்கவும் அல்லது நடவடிக்கை எடுக்கவோ வைகோ ஏதோ உள்ளூர பயம் கொண்டிருப்பதாக தெரிவித்தார் . தனது எந்த தொழில்களையும் வெற்றி பெறாத துறை வைகோ சினிமா படம் எடுத்து கட்சியை வளர்த்த நினைத்தார் ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்ததாகவும் அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் இரண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்றார்.
- 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
- முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் 13 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 7 முதலை குட்டிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் பிறந்தவை ஆகும்.
இந்த 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதையொட்டி முதலைகைள பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து விருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது குறித்து கிண்டி பூங்கா அதிகாரி அறிவழகன் கூறும்போது, கடந்த 1993-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 6 முதலகைள் கொண்டு விடப்பட்டது. ஆனால் அவை எதிர்பார்த்த இன பெருக்கம் செய்யவில்லை.
கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் 24 முட்டைகளில் இருந்து முதலைக்குட்டிகள் பொறித்தன. இதில் பலவீனமாக இருந்த முதலைக்குட்டிகள் ஒவ்வொன்றாக இறந்தன. தற்போது 7 முதலைக் குட்டிகள் உள்ளன. இதன் 3-வது பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடினோம். முதலைகளுக்கு மீன்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு முதலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
- 2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலராக உள்ளது.
2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எலான் மஸ்க் அங்கு சென்றிருந்தார். அங்கு அவரை பெர்னார்ட் அர்னால்ட் சந்தித்தார். இருவரும் மதிய உணவு விருந்தில் ஒன்றாக பங்கேற்றனர். இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பி இருந்த நிலையில், மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திராவின் மனைவிக்கு ஒரு வித்தியாசமான சந்தேகம் கிளம்பி உள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகிந்திராவின் பதிவில், பெர்னார்ட் அர்னால்டும், எலான் மஸ்கும் சந்தித்து மதிய உணவு அருந்தி இருந்தாலும், இந்த விருந்துக்கான செலவை யார் ஏற்பது என தனது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த வலைதள பயனர்கள் தங்களது கற்பனை பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
- ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார்.
- நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் ராஜேந்திரன் என்பவர் 32 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றார். இந்த நிலையில் அவரை கவுரவப்படுத்துவது என்று ஊட்டி 7 வது வார்டு நகரமன்ற உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான விசாலாட்சி விஜயகுமார் முடிவு செய்தார்.
எனவே அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தூய்மைப்பணியாளர் ராஜேந்திரனை வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு சால்வை அணித்து, மதியஉணவு விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.
நங்கவள்ளி:
சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் பழனி தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து, சி.ஐ.டி.யூ. சேலம் மாவட்ட நிர்வாகி திருப்பதி, மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.
சேலத்தில் பெரியசாமியை தாக்கியவர்களை கண்டித் தும், அவர்களை கைது செய்ய கோரியும் கோஷங் கள் எழுப்பப்பட்டன.
- பொது சிவில் சட்டத்தை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
மதுரை
நாட்டின் பன்முக தன் மையை சீர் குலைக்கும் விதமாக பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளதாக கூறியும், அதனை கண்டித் தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் கட்சி–யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகு–மான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தொகுப்புரை வழங்கினார். மதுரை முஸ் லிம் ஐக்கிய ஜமாத் செயலா–ளர் நிஸ்தார் அஹ்மத், பொருளாளர் அப்துல் காதர், முன்னாள் தலைவர் நஜ்முதீன், ஜமாஅத்துல் உலமா மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் மன்பஈ,
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், சோகோ அறக்கட்டளை பொறுப்பா–ளர் வழக்கறிஞர் செல்வ கோமதி மற்றும் அனைத்து கட்சி, இயக்க, ஜமாஅத் நிர்வாகிகள், உலாமா பெரு–மக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன் னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமி–நாதன், அகில இந்திய பார் வர்டு பிளாக் தேசிய துணைத் தலைவரும், முன் னாள் எம்.எல்.ஏ.வு–மான பி.வி.கதிரவன், சி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராஜன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபிக் அஹ்மது, திருவடி குடில் சுவாமிகள், தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேரறிவாளன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாஹ் கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
- மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி
- பல்வேறு ஊர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம்:
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஸ்ரீ ராமலு முரளி முன்னிலை வகித்தார்.
இதில் ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன், வெண்ணந்தூர் வட்டாரத் தலைவர் சொக்கலிங்க மூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாமகிரிப்பேட்டை இளங்கோ, பிள்ளாநல்லூர் சண்முகசுந்தரம், வெண்ணந்தூர் சிங்காரம், அத்தனூர் பூபதி, நகராட்சி கவுன்சிலர் லலிதா பாலு, குருசாமிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோபால், மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மகேஸ்வரி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், ராசிபுரம் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம், பழனிசாமி, மதுரை வீரன், கோவிந்தராஜ், ஜெயபால் ராஜ், சேக் உசேன் பலர் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்
இதேபோல் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொத்தனூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், காந்தி, மாவட்ட பொருளாளர்கள் மணி, குப்புசாமி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் மோகனூர் வட்டார தலைவர்கள் நடராஜன், முத்துசாமி, குப்புசாமி, பரமத்தி வட்டாரத் தலைவர் சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஓமலூர்
சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மற்றும் மணிப்பூர் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் மூத்த நிர்வாகி மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகு தீபம் ஏந்தி மத்திய பா.ஜ.க. அரசையும், மணிப்பூர் பா.ஜ.க அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து 1 மணி நேரமாக மெழுகு தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
- சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர்சங்கர் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறிவிருந்து நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய கிடாய்கள் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொன்னர்சங்கர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் முன்பு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட படையல் கறி விருந்து விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் புதுப்பட்டி, புதூர், நடுவனூர், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கிடாய் வெட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.