search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paruppu keerai wheat adai"

    பயறு வகைகள், கீரை போன்றவற்றைத் தினசரியோ அடிக்கடியோ சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். இன்று பருப்புக்கீரை கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை - 1 கப்
    பச்சரிசி - கால் கப்
    முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    உப்பு - தேவைக்கு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    பருப்புக் கீரை - அரை கட்டு
    சிறிய வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பருப்புக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

    மறுநாள் பச்சரிசியைத் தனியே ஊறவைத்துக்கொள்ளுங்கள். 

    இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு இவற்றுடன் முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவைவிடக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அரைத்த மாவுடன் நறுக்கிய பருப்புக் கீரை, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். 

    பிறகு மாவை வாழையிலையில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு துளையிடுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சிவக்க வேகவைத்து எடுங்கள்.

    சத்தான பருப்புக்கீரை கோதுமை அடை ரெடி.

    விருப்பப்பட்ட எந்த கீரையை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×